மதுரை மசாஜ் சென்டருக்குள் திடீர்னு நுழைந்த போலீஸ்.. அங்கே பார்த்தால் இருட்டறையில்.. அடக்கடவுளே

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் சமீபகாலமாகவே பாலியல் தொழில் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. இது அம்மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

மசாஜ் செய்வதும் ஒருவகையான தொழில்தான் என்பதால், பலரது வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்து கொண்டிருக்கிறது. அதனால்தான், உரிய நிபந்தனைகளுடன் ஸ்பா சென்டர் நடத்தலாம் என்று வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

Madurai Prostitution

குறிப்பாக மசாஜ் செய்பவர்கள் அதற்கான பயிற்சியை முறையாக பயின்று, சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும் என்பதும் கோர்ட் உத்தரவாக உள்ளது. ஆனால், கோர்ட் உத்தரவை பலரும் சரியாக பின்பற்றுவதில்லையாம்.

அதிரடிகள்: சமீபகாலமாகவே, தமிழகம் முழுவதும் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தும் சிலர், சட்டவிரோதமாக பாலியல் தொழிலும் செய்து வருவது அதிகரித்து வருவதால், போலீசார் இதுகுறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

ஸ்பா சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்வது, முறையான லைசென்ஸ் பெறாமல் ஸ்பா சென்டரை நடத்துவது போன்ற காரணங்களினால், சம்பந்தப்பட்ட ஸ்பா சென்டருக்குள்ளேயே நுழைந்து, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஸ்பா சென்டர்: அந்தவகையில், மதுரையிலும் ஸ்பா சென்டர்கள் சமீபகாலமாகவே மலிந்து வருகின்றன.. இப்படித்தான் 2 நாட்களுக்கு முன்பு, மதுரை கே.கே.நகர் லேக்வியூ ரோடு பகுதியில் "துலாஸ்" ஸ்பா சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அந்த ஸ்பா சென்டருக்குள் திடீரென நுழைந்து போலீசார் சோதனையிட்டனர்.. அப்போதுதான், அங்கே விபச்சாரம் நடப்பது உறுதியானது.

இது தொடர்பாக கோவை சரவணகுமார் உட்பட 2 பேரை கைது செய்த போலீசார், 4 பெண்களை அங்கிருந்து மீட்டனர்.. போலியான அனுமதி சான்றிதழை தயாரித்து, அருண்குமார் என்பவர் இந்த ஸ்பாவுக்காக பயன்படுத்தி வந்துள்ளதால், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையடுத்து, மதுரை மாவட்டத்தில், லைசென்ஸ் பெறாமல் நடந்து வரும் மசாஜ் சென்டர் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை தந்துவருகின்றன.

போலி அனுமதி: மதுரையிலுள்ள 50 ஸ்பா சென்டர்களில் வெறும் 7 மட்டுமே முறையான லைசென்ஸ் பெற்றிருப்பதாகவும், மற்றவை போலி அனுமதி கடிதங்களுடன் நடத்தப்படுவதாகவும், இங்கு மசாஜ் செய்யும் மணிப்பூர், அசாம் மாநில பெண்களில் பலருக்கு ஸ்பா சென்டர் உரிமையாளர்கள் போலியாக சான்றிதழ் தயாரித்து கொடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பதாகவும் பகீர் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுபோன்ற ஸ்பா சென்டர்களுக்கான வெப்சைட்களில் உள்ள விளம்பரத்தை பார்த்து வாடிக்கையாளர்கள் முயலும்போது, அவரது போன் நம்பர், சம்பந்தப்பட்ட ஸ்பா சென்டரில் பதிவாகிவிடுமாம்...

போன் நம்பர்: பிறகு, ஸ்பா சென்டரிலிருந்து போன் செய்து, என்ன மசாஜ், கட்டணம் எவ்வளவு? என்றெல்லாம் விவரத்தை கேட்பார்களாம். அப்போது "அது" உண்டா என்று கேட்பார்களாம்.. உண்டு அல்லது இல்லை என்று சென்டரிலிருந்து பதிலளிப்பார்களாம்.

அதேபோல, ஏற்கனவே மசாஜ் சென்டருக்கு வந்த பழைய கஸ்டமர் என்றால், மசாஜ் செய்து முடிந்ததுமே, "எக்ஸ்ட்ரா' வேணுமா" என்று பாலியல் தொழிலுக்கான சங்கேத வார்த்தைகளில் கேட்பார்களாம். இதற்கு சம்மதம் என்றால், அந்த அறையிலேயே பாலியல் தொழில் நடக்குமாம்.. இதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும்.. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு டிப்ஸ் போன்றவையும் உண்டு. இதைத்தவிர "சலுகை" என்ற பெயரில் மசாஜ் செய்யும் நேரத்தை கூடுதலாக நீட்டித்து, கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறதாம்.

சுழற்சி முறை: ஏற்கனவே விபச்சாரத்தில் ஈடுபட்டு கைதான பெண்களுக்குதான், போலி சான்றிதழ் தந்து, மசாஜ் என்ற பெயரில் விபச்சாரத்திலும் ஈடுபட வைக்கிறார்கள். அதிலும் இவர்கள் ஒரே இடத்தில் பணிபுரியாமல், மதுரையிலுள்ள ஸ்பா சென்டர்களுக்கும் சுழற்சி முறையில் அனுப்பப்படுகிறார்களாம். இதற்கெனவே தனியாக வாட்ஸ் அப் குரூப் உள்ளதாக கூறுகிறார்கள்.

வறுமை, குடும்ப சூழல், கடன் பிரச்சனை, இப்படி எத்தனையோ நிர்ப்பந்தம், நெருக்கடிகளால் இந்த தொழிலில் ஈடுபடுவதாக போலீசாரிடம் அந்த பெண்கள் கண்ணீருடன் சொல்கிறார்களாம்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "கோர்ட் நிபந்தனையை ஸ்பா சென்டர்கள் கடைப்பிடிப்பதில்லை.. ஸ்பா அண்ட் சலுான் என்ற பெயரில் கூட சில இடங்களில் விபச்சாரம் நடக்கிறது...

முற்றுப்புள்ளி: அதேபோல வாடிக்கையாளர் விபரங்களையும் பதிவேடுகளில் பராமரிப்பதில்லை. எப்போதுமே மசாஜ் செய்யும் அறை இருட்டாக இருக்கக்கூடாது என்பது விதி. ஆனால் இருட்டறையில்தான் செய்கிறார்கள். போலி சான்றுடன் கை, கால்களை அமுக்கி விட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இதற்கெல்லாம் விரைவில் முடிவு கட்டப்படும்" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+