மதுரையை 2-வது தலைநகராக அறிவிக்க வலுக்கும் கோரிக்கை.. அமைச்சர் செல்லூர் ராஜு ஆதரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: அமைச்சர் உதயகுமாரை தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜுவும் மதுரையை 2வது தலைநகராக அறிவிக்க ஆதரவு தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜு, அரசியலுக்கும், கலை உலகிற்கும் தலைநகரமாக மதுரை திகழ்கிறது என்று கூறியுள்ளார்.

Recommended Video

    மதுரையை இரண்டாவது தலைநகராகக்க வேண்டும் - ஆர். பி. உதயகுமார் தீர்மானம்

    தென் மாவட்ட மக்களின் கனவை நனவாக்கும் வகையில் இரண்டாம் தலைநகரமாக மதுரையை உருவாக்கிட வேண்டும் - முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்.

    அந்த தீர்மானத்தில் "இந்தியாவின் இரண்டாம் பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது இந்நிலையில் சென்னையில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் எதிர்கால நலன் கருத்தினை கொண்டு முதலமைச்சருக்கும், துணைமுதலமைச்சருக்கும் பணிவான வேண்டுகோள் விடுத்து கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம்

    தென்மாவட்ட மக்கள் விருப்பம்

    தென்மாவட்ட மக்கள் விருப்பம்

    தென்மாவட்ட மக்களின் இன்றைக்கும் நம்பிக்கைக்ககு பாத்திரமாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திகழ்ந்து வருகின்றனர் இந்த நான்காண்டு காலத்தில் பல ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட மக்கள் நலத்திட்டங்களை வாரிவாரி வழங்கி தென்மாவட்ட மக்களின் மனதை குளிரச் செய்துள்ளனர். அதேபோல் தற்போது சூழ்நிலையில் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக உருவாக்குவது என்பது தென் மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது."

    குஜராத்தில் 2 தலைநகரங்கள்

    குஜராத்தில் 2 தலைநகரங்கள்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக இருந்தபொழுதும் இரண்டு தலைநகர் இருக்கிறது குஜராத் அருகே இருந்தாலும் காந்திநகர் பாதியும், அகமாபாத் பாதியும் என அரசு அலுவலர்கள் உள்ளன . ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைய உள்ளது, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மூன்று தலைநகரங்கள் உள்ளன பல வெளிநாடுகளில் 2 நகரங்கள் உள்ளன. அந்த வகையில் மதுரையை இரண்டாம் தலைநகரமாக்க முதலமைச்சர், மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆகியோர் கருணைகூர்ந்து உருவாக்கினால் தென்மாவட்ட மக்களுக்கு வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமையும்.

    சர்வதேச விமான நிலையம்

    சர்வதேச விமான நிலையம்

    இதுமட்டுமல்லாது மதுரையில் சென்னை உயர்நீதிமன்ற கிளை அமைந்துள்ளது சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை அதேபோல் தூத்துக்குடி துறைமுகம் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தென்மாவட்ட சாலைகளை இணைக்கும் சாலை கட்டமைப்பு தேவைக்கேற்ற வகையில் உள்ளது. நிர்வாகம் அமைய வேண்டும் என்றால் குறைந்தது 10,000 ஏக்கர் நிலம் வேண்டும் மதுரை புறநகர் பகுதிகளில் நிலத்தை தேர்வு செய்ய முடியும். தென் மாவட்ட மக்களின் தொழில் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என தென் மாவட்ட அடிப்படை கட்டமைப்பு உருவாவது, இரண்டாம் தலைநகர் காலத்தின் கட்டாயம் ஆகிறது.

    மதுரை அதிமுக கோரிக்கை

    மதுரை அதிமுக கோரிக்கை

    அன்னை மீனாட்சி குடிகொண்டிருக்கும் மதுரையில் தமிழகத்தில் நிர்வாகம் நன்றாக உருவாக வேண்டும் ஆகவே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கருணை உள்ளத்தோடு மதுரையை இரண்டாம் தலைநகரமாக உருவாக்கிட வேண்டும் என மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வேண்டுகோள் விடுக்கிறது" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    மதுரை தலைநகரம்

    மதுரை தலைநகரம்

    அமைச்சர் உதயகுமாரை தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூம் மதுரையை 2வது தலைநகராக அறிவிக்க ஆதரவு தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜு, அரசியலுக்கும், கலை உலகிற்கும் தலைநகரமாக மதுரை திகழ்கிறது என்று கூறியுள்ளார். அமைச்சர் உதயகுமாரும், மதுரையைச் சேர்ந்தவர், செல்லூர் ராஜூம் மதுரையைச் சேர்ந்தவர் ஆவார். இருவரும் மதுரையை 2வது தலைநகராக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளதால் மதுரை மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது ஒருபுறம்எனில் ஏற்கனவே திருச்சியை தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.


    .

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+