மதுரை பிரியாணி திருவிழா.. முனியாண்டி சாமிக்கு படையல்.. ஊருக்கே கறி விருந்து.. கம கம வடக்கம்பட்டி
மதுரை: முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களால் 89வது ஆண்டாக நேற்று மதுரை வடக்கம்பட்டி முனியாண்டி சாமிக்கு பிரியாணி படையல் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அண்டா அண்டாவாக பிரியாணி சமைத்து முனியாண்டி சாமிக்கு படையலிட்டு பிரசாதமாக மக்களுக்கு விருந்தளித்தனர்.
ஒரு காலத்தில் உணவு கிடைப்பதே மிகவும் சவாலாக இருந்த காலத்திலிருந்து, இன்று பெரும்பாலான மக்களுக்கு உணவு கிடைக்கும் நிலைக்கு மனித சமூகம் உயர்ந்திருக்கிறது. முன்பெல்லாம் உறவினர்களை தேடி ஊருக்கு போகும் போது, உறவினர்கள் வீட்டை பூட்டிவிட்டு வேறு எங்காவது சென்றிருப்பார்கள். ஆனால், இன்னார் வீட்டிற்கு நாம் வந்திருக்கிறோம் என்பதை தெரிந்துகொண்ட அக்கம் பக்கத்தினர், பூட்டிய வீட்டினர் வரும் வரையில் நம்மை அழைத்து உணவு கொடுத்து உபசரிப்பார்கள்.

ஆனால் இப்போது அப்படியெல்லாம் எந்த அக்கம் பக்கத்தினரையும் பார்க்க முடிவதில்லை. மூலைக்கு மூலை ஓட்டல்கள் முளைத்துவிட்டன. இப்படியாக ஓட்டல்களை தொடங்கியவர்களில் மதுரை வடக்கம்பட்டியை சேர்ந்த குருசாமியும் ஒருவர். இவர் கடந்த 1937ம் ஆண்டு காரைக்குடியில் 'முனியாண்டி விலாஸ்' எனும் பெயரில் ஓட்டலை தொடங்கியுள்ளார். இவரை தொடர்ந்து கள்ளிக்குடியிலும் இதே பெயரில் ராமு என்பவரால் ஓட்டல் தொடங்கப்பட்டிருக்கிறது. பின்னர் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் இந்த பெயர்களில் ஓட்டல்கள் பரவின.
அசைவ உணவு என்றாலே முனியாண்டி விலாஸ் என்கிற அளவுக்கு இந்த ஓட்டல்கள் புகழ்பெற்றன. இந்த ஓட்டல்களை பெரும்பாலும், மதுரை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்களே நடத்தி வருகின்றனர். ஓட்டல் என்னதான் புகழ் பெற்றாலும், அதன் உரிமையாளர்கள் மனதில் ஒருவிஷயம் உறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது. பசிக்கு வருபவர்களிடம் காசு வாங்கிக்கொண்டு உணவு கொடுப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனவே தினந்தோறும் வரும் முதல் வருமானம் அல்லது, மொத்த லாபத்தில் ஒரு பகுதியை எடுத்து வைத்து தங்கள் காவல் தெய்வமான முனியாண்டி கோயிலின் திருவிழாவுக்கு கொடுத்துவிடுவார்கள். இப்படி ஓட்டல் உரிமையாளர்கள் கொடுக்கும் தொகையில் ஆடு, கோழி, அரிசி வாங்கப்பட்டு முனியாண்டிக்கு பிரம்மாண்ட படையல் போடப்படும். ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இந்த திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
கடந்த 88 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த படையல் திருவிழா, 89வது ஆண்டாக இந்த ஆண்டும் நீடித்திருக்கிறது. உணவுக்கு சுத்தமான இறைச்சியை மட்டுமே பயன்படுத்துவோம் என்பதை இந்த படையலின் போது ஓட்டல் உரிமையாளர்கள் முடியாண்டிக்கு சத்தியம் செய்து கொடுக்கின்றனர். அதை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். லாபத்திற்காக மக்கள் வயிற்றில் அடிக்கமாட்டோம் என்கிற இந்த சத்தியமே இன்றுவரை முனியாண்டி விலாஸ் ஓட்டலுக்கு என தனி பெயரை உருவாக்கி கொடுத்திருக்கிறது என படையலிடுபவர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாடு, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாது, துபாய், சிங்கப்பூர் என வெளிநாடுகளில் இயங்கி வரும் முனியாண்டி விலாஸின் உரிமையாளர்கள் நேற்று நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்றனர். 2500 கிலோ அரிசியில் பிரியாணி தயார் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மட்டுமல்லாது விருதுநகர், தேனி, திண்டுக்கல், என அக்கம் பக்கம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் வந்து பிரசாதமாக பிரியாணியை பெற்று சென்றனர்.
பெண் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்து எடுத்து வந்த தேங்காய், பழம், பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலை மாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
விருந்தோம்பல் என்பது தமிழர்களின் பண்பாடு. அது நமது அடையாளம். ஆனால், பசி என வருபவர்களிடம் காசு வாங்கிக்கொண்டு உணவு கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத தமிழர்களின் நேர்மையான மனம், அதை நேர் செய்யும் விதமாக ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கே பிரியாணி விருந்து திருவிழாவை நடத்தி வருகிறது என முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications