ஓடுறது.. பறக்குறது.. மிதக்குறது..முனியாண்டி விலாஸையே இறக்கிய அமைச்சர் மூர்த்தி! உற்சாகமான அதிகாரிகள்
மதுரை: மதுரை ஆலத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் பதிவுத் துறை மாநிலப் பணி மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்களுக்கு தனக்கு உரிய ஸ்டைலில் பிரம்மாண்ட விருந்து வைத்து அசத்தியுள்ளார் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.
மதுரை ஆலத்தூரில் திருமண மண்டபத்தில் பதிவுத்துறை மாநிலப்பணி மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மேலும் தமிழகம் முழுதும் இருந்து வந்திருந்த பதிவுத்துறை அலுவலர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி ஏற்பாடு செய்திருந்த விருந்துதான் கமகமக்க வைத்தது.
மூர்த்தியின் விருந்து:
தலை வாழை இலை போட்டு.. மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, மட்டன் கோலா உருண்டை, மட்டன் எலும்பு குழம்பு, மட்டன் நுரையீரல் கூட்டு, மட்டன் குடல் கிரேவி, கரண்டி ஆம்லெட், பொரிச்ச மீன், மட்டன் நெஞ்சு எலும்பு சாப்ஸ், கரண்டி ஆம்லெட், சிக்கன் 65, தயிர் பச்சடி, ஊறுகாய், ஜிகர்தண்டா, பீடா, அயிரை மீன் குழம்பு, விரால் மீன் குழம்பு, ரசம், புளிக் குழம்பு, மோர் மற்றும் பாயாசம் என ஒரு முனியாண்டி விலாஸ் ஓட்டலையே இறக்கி மாஸ் காட்டி விட்டார்.
குவிந்த தொண்டர்கள்:
இந்த தகவலைக் கேட்டு அரசுத்துறை அதிகாரிகள் மட்டுமல்லாது உள்ளூர் திமுக நிர்வாகிகள் தொடங்கி பல தரப்பினரும் மண்டபத்தில் குவிந்து கிடாவெட்டு போல ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தை ஒரு பிடி பிடித்து விட்டுச் சென்றனர். அமைச்சர் மூர்த்தி இதுபோல பிரம்மாண்ட விருந்து வைப்பது ஒன்றும் முதல் முறை கிடையாது. ஏற்கனவே திமுக நிகழ்ச்சிகளிலும் அவரது மகன் திருமணத்திலும் மூர்த்தி வைத்த விருந்துதான் மதுரையில் பேசுபொருளாக இருந்தது. மேலும் சென்னையில் பத்திரப்பதிவு தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் மூர்த்தி இதுபோல பிரம்மாண்ட விருந்து வைப்பது வழக்கம் தான்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை:
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மூர்த்தி,"வணிகவரி மற்றும் பதிவுத்துறை வாயிலாக தமிழக அரசுக்கு 87 சதவீதம் வருவாய் கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டில் பதிவுத்துறையில் 2,200 கோடி ரூபாயும், வணிகவரிதுறையில் 10,000 கோடி ரூபாயும் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.வணிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் வணிகவரி துறையில் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் அலுவலர்களுக்கு பதவி உயர்வில் உள்ள பிரச்சினைகளை கலைந்து பதவி உயர்வு அளிக்க தயாராக உள்ளேன்.

உரிய நடவடிக்கை:
பதிவுத்துறையில் குற்ற குறிப்பாணை காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுத்துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 150 பணியாளர்கள் குறித்து விசாரணை செய்யப்படும்.பதிவுத்துறையில் தவறு செய்யாத பணியாளர்களுக்கு சட்டத்தின்படி மீண்டும் பணி வழங்கப்படும். நடப்பு ஆண்டில் பதிவுத்துறையில் 24,000 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாத இறுதிக்குள்ளாக பதிவுத்துறையில் 38 உதவி பதிவுத்துறை தலைவர் பதவியிடங்கள் நிரப்பப்படும்.
பதவி உயர்வு:
அதன் தொடர்ச்சியாக அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும், வணிகவரித்துறையில் 20 நாட்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டது, பதிவுத்துறையில் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பதவி உயர்வு வழங்க இயலாத நிலை உள்ளது, பதிவுத்துறையில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பதவி உயர்வு வழங்க தயாராக இருக்கிறேன்.

இரண்டு கண்கள்:
வணிகவரி துறையும் பதிவுத்துறையும் எனக்கு 2 கண்களாக உள்ளது, பதிவுத்துறை அலுவலர்கள் ஆவண எழுத்தாளர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும், பதிவுத்துறை அலுவலர்கள் அவர்களாக பிரச்சினைகளில் மாட்டி கொண்டால் நான் பொறுப்பல்ல, பதிவுத்துறை அலுவலர்களுக்கு பணியில் பிரச்சினை என்றால் நான் என்றும் விட்டு கொடுக்க மாட்டேன், பதிவுத்துறை பணியாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்" என பேசினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications