உசிலம்பட்டி மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏன் தெரியுமா?.. அமைச்சர் பதிலால் எழுந்த சிரிப்பலை
மதுரை: உசிலம்பட்டி மக்களுக்கு ரத்த அழுத்தம் அதிகம் உள்ளது ஏன் என அமைச்சர் மூர்த்தி கூறியது நகைப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெருங்காமநல்லூரில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதே போல் ஈ கோட்டைப்பட்டி, மள்ளப்புரம், உத்தப்பரம் ஆகிய இடங்களிலும் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழாவில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியனும் பி மூர்த்தியும் கலந்து கொண்டார்கள். பின்னர் துணை சுகாதார நிலையத்தில் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து சுற்றி பார்த்தனர்.

மா சுப்பிரமணியன் பேச்சு
இந்த நிகழ்வில் அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசுகையில் உசிலம்பட்டி மக்களுக்கு இயல்பாகவே ரத்த அழுத்தம் அதிகமாகவே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். அப்போது அமைச்சர் மூர்த்தி குறுக்கிட்டார்.

குறுக்கிட்ட மூர்த்தி
அவர் கூறுகையில் உசிலம்பட்டி அப்படிப்பட்ட மண். உசிலம்பட்டி மக்களுக்கு இயல்பாகவே ரத்த அழுத்தம் அதிகம் என்றார். இதனால் மேடையில் சிரிப்பலை எழுந்தது. பின்னர் தொடர்ந்த அமைச்சர் மா சுப்பிரமணியன் ரத்த அழுத்தத்தை குறைக்க மக்கள் முயற்சிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

உடல்நலம்
அமைச்சர் மா சுப்பிரமணியன் எப்போதும் உடல்நலனில் அக்கறை கொண்டவர். தன்னை சுற்றியிருப்பவர்களையும் அக்கறை கொள்ளுமாறு அறிவுறுத்துவார். தினந்தோறும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஓட்டம் என உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார்.
Recommended Video

மாரத்தான்
மாரத்தான் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொள்கிறார். மலை பிரதேசத்திற்கு போனாலும் குளிர் பிரதேசத்திற்கு போனாலும் ஓட்டப்பயிற்சியை விடவே மாட்டார். டெல்லிக்கு தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொண்டு செல்லும் போதும் நாடாளுமன்ற வளாகத்தில் காலை நேரத்தில் ஓட்டபயிற்சியை வியர்க்க விறுவிறுக்க செய்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications