ஒழுக்கத்திற்கு நான் தான் உதாரணம்... அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேச்சு
மதுரை: விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பதன் மூலம் அவர்களுக்கு ஒழுக்கம் கிடைக்கிறது என்றும், சிறுவயதில் தாம் ஒரு விளையாட்டு வீரர் என்பதால் இப்போது வரை ஒழுக்கத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு.
மேலும், ஒழுக்கத்திற்கு தாமே சிறந்த உதாரணம் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ மார்தட்டிக்கொண்டார்.
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியை மதுரையில் தொடங்கி வைத்துவிட்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் பேச்சு
மதுரையில் விளையாட்டு போட்டி ஒன்றை தொடங்கி வைக்கச் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜு, மாணவப்பருவத்தில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றதால் தான் தாம் இன்றும் ஒழுக்கமுடன் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், ஒழுக்கத்திற்கு தாம் தான் உதாரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு
தமிழகத்தில் நிலவும் வறட்சியை போக்கவே பொங்கல் பரிசு வழங்குவதாகவும், தமிழக அரசின் எந்த துறை மீதும் குறை சொல்ல முடியாத நிலை உள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். குறைகூட முடியாத வகையில் அரசின் செயல்பாடு அமைந்துள்ளதாக கூறினார்.

நெட்டிசன்ஸ்
ஒழுக்கத்திற்கு தாம் தான் சிறந்த உதாரணம் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதை நெட்டிசன்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர். மேலும், வறட்சியை போக்க பொங்கல் பரிசு என அவர் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எது பேசினாலும்
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை பொறுத்தவரை அவர் எது பேசினாலும் ஒன்று கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகும், இல்லையென்றால் சர்ச்சையில் சிக்கும். என்ன செய்வது எங்கள் அமைச்சரின் ராசி அப்படி என்கின்றனர் மதுரை ர.ர.க்கள்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications