ரஞ்சிதாவின் சுயநல காதல்.. 3 பிள்ளைகளுக்கு பிஸ்கட்டில் எலிமருந்து.. 2 பேர் பலி.. கதறி துடித்த தந்தை
பெற்ற பிள்ளைகள் 3 பேருக்கு தாய் எலிமருந்து பிஸ்கட் தந்துள்ளார்.
மதுரை: பெற்ற குழந்தைகளுக்கு பிஸ்கட்டில் எலி மருந்தை கொடுத்து கொன்றுள்ளார் ஒரு தாய்.. எல்லாம் தன்னுடைய கள்ளக் காதலுக்காகத்தான்!
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த சருகுவலையபட்டியை சேர்ந்தவர் ராகவானந்தம். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பெயர் ரஞ்சிதா. 27 வயதாகிறது. இந்த தம்பதியருக்கு 3 குழந்தைகள் இருந்தனர்.
ஆனால் கடந்த 2016-ம் வருஷம் வீட்டின் முன் 3 குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தபோது, எலி மருந்தை சாப்பிட்டுள்ளனர். இதில், பார்கவி, யுவராஜா என்ற 2 குழந்தைகள் உயிரிழந்தனர். கிரிபாலன் என்ற குழந்தை மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறவும் உயிர் பிழைத்தான்.

எலி மருந்து
இந்நிலையில் தன் குழந்தைகளுக்கு யாரோ எலி மருந்து தடவிய பிஸ்கட்டுகளை கொடுத்து கொன்றுவிட்டனர் என்று ரஞ்சிதா போலீசில் புகார் தந்தார். குழந்தைகள் இறந்துவிட்ட தகவலை கேட்டு, வெளிநாட்டில் இருந்து கதறியபடியே வந்தார் ராகவானந்தம்.

பிஸ்கட்
பின்னர், வீட்டில் என்னதான் நடந்தது என்று மகன் கிரிபாலனிடம் கேட்டதற்கு, அம்மாவும், கல்யாண்குமார் என்பரும் சேர்ந்து எலிமருந்து தடவிய பிஸ்கட்களை சாப்பிட தந்தார்கள், அதை சாப்பிட்டபோது கசப்பா இருந்தது.. அதனால நான் துப்பிட்டேன்.. பார்கவி, யுவராஜாவும் சாப்பிட்டு விட்டனர்" என்று சொல்லி உள்ளான்.

தலைமறைவு
அதிர்ச்சி அடைந்த ராகவானந்தம், போலீசில் புகார் தந்தார். ஆனால் நடவடிக்கை இல்லை.. அதனால் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. ராகவானந்தம், கோர்ட், போலீஸ் சென்றவுடனேயே ரஞ்சிதா எஸ்கேப் ஆகியிருந்தார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரஞ்சிதா , கள்ளக்காதலன் கல்யாண்குமாரை போலீசார் கைது செய்தனர்.

ஜோடி கைது
இருவரின் கள்ளக்காதலுக்கு 3 பிள்ளைகளும் இடைஞ்சலாக இருந்ததால் எலிமருந்து தடவிய பிஸ்கட்டுகளை தந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில், 3 வருஷத்துக்கு பிறகு, கள்ளக்காதல் ஜோடி கைதாகி உள்ளது.
-
கைமாறிய 12 வருட மனைவி.. குஜராத் கணவர் தந்த புகாரில் செம ட்விஸ்ட்.. அலறியடித்து ஓடிய 10 பேர் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications