நாங்குநேரி இடைத்தேர்தல் செலவை வசந்தகுமாரிடம் இருந்து பெறக்கோரிய மனு தள்ளுபடி!
நாங்குநேரி இடைத்தேர்தல் செலவு தொடர்பான மனு தள்ளுபடி
மதுரை: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை நடத்த ஆகும் செலவை நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமாரிடமிருந்து வசூலிக்கக் கோரிய வழக்கினைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கேகே ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், " நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். ஆகையால் நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏ பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசு கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பணிக்காக செலவு செய்கிறது. ஏற்கனவே தமிழகம் 45 ஆயிரத்து 119 கோடி கடனில் இயங்கி வருகிறது. மழையின்றி போன நிலையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அரசின் பெரும்பாலான துறைகள் கடனிலேயே இயங்கி வருகின்றன. இந்நிலையில் இடைத்தேர்தலை நடத்துவது என்பதே அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும்.
ஆகவே நாங்குநேரி தொகுதியில் இடைத் தேர்தலை நடத்துவதற்கு காரணமான ஹெச் வசந்தகுமார் அவரிடம் இருந்து இடைத்தேர்தலுக்கு ஆகும் செலவை வசூலிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியும், எவ்வித பதிலும் இல்லை. ஆகவே, மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்கும் வகையில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை நடத்த ஆகும் செலவை நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தார் வசந்தகுமாரிடமிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும்"என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் புகழேந்தி அமர்வு வழக்கினைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications