ஜெட் வேகத்தில் போய்ட்டிருக்கோம்.. அமமுகவுடன் பேச்சா.. நோ நோ வாய்ப்பே இல்லை.. செல்லூர் ராஜு
Recommended Video

மதுரை: அதிமுக-அமமுக இணைப்பு குறித்து அதிமுக எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தியது இல்லையென அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அதிமுக-அமமுக இணையும் என மதுரை ஆதீனம் அண்மையில் இரண்டாவது முறையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இதேமாதிரி ஆதீனம் தொடர்ந்து பேசினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்,
இதனால் அதிமுக-அமமுக இணைப்பு பேச்சுவார்த்தையை அதிமுகவே நடத்துக்கிறதா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவில் இணைப்பு
மதுரையில் 500 சிஐடி தொழிற்சங்கத்தினர் விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடந்தது. இந்த விழாவின் போது அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பல விஷயங்கள் குறித்து பேசினார்.

பேச்சுவார்த்தை நடக்கவில்லை
அப்பேது அவர் கூறுகையில் "அதிமுக- அமமுக இணைப்பு குறித்து அதிமுக எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தவில்லை. அதிமுக -அமமுக இணையும் வேண்டும் என அவரது விருப்பதை மதுரை ஆதீனம் சொல்லியிருக்கிறார்.

வாழ்த்திய ஆதீனம்
துலு மகா சந்திதனாத்தின் 75வது பிறந்த நாளையொட்டி, மதுரைக்கு பெருமை சேர்க்கின்ற ஆதீனத்தின் மடத்துக்குச் சென்று நாங்கள் அவருக்கு வாழ்த்து சொன்னோம். அவர் எங்களுக்கு வாழ்த்து சொன்னார். அவருடைய ஆசியை பெற்றோம். அருமை தம்பி ராஜ் சத்யன் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாய் என்றார்.

திமுக உடன் கூட்டணி
மதுரையில் சி.பி.எம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சு.வெங்கடேசன் தொழிலாளர்களுக்கு ஒன்றும் செய்யாதவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காக உயிரை இழந்த லீலாவதியை கொலை செய்தவர்களுடன் சி.பி.எம் கைகோர்த்து உள்ளது, இதனால் லீலாவதி குடும்பம் மன வேதனை அடைந்துள்ளது, சி.பி.எம் மாநிலத்துக்கு ஒரு கொள்கை வைத்து உள்ளது, தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு, கேரளத்தில் ஒரு நிலைபாடு என மாநிலத்திற்கு ஒரு கொள்கையை கடைபிடித்து வருகிறது,

உண்மையை சொல்வன்
மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என் மீது புகார் கொடுக்கிறது என்பதற்காக, நான் உண்மையை சொல்ல முடியாமல் இருக்க முடியாது, தினகரன் பாவம் பரிசு பெட்டகத்தை தூக்கி இருக்கிறார், ஆனால் அதிமுக ஜெட் வேகத்தில் போய் கொண்டிருக்கிறது. எனவே அதிமுக- அமமுக இணைப்பு நடக்காது" இவ்வாறு செல்லூர் ராஜு கூறினார்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
சிங்கப்பெண் திட்டத்தை.. தொடங்கி வைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா? சீறும் டிடிவி தினகரன் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications