இந்திராணியின் கணவர் பொன். வசந்த் இப்படி செய்தாரா? திமுக சுளீர்.. மதுரை மேயர், பிடிஆரின் ஆதரவாளராச்சே
மதுரை: முதல்வர் ஸ்டாலின் மே 31ல் மதுரை பயணிக்க உள்ள நிலையில், அமைச்சர் தியாகராஜனின் தீவிர ஆதரவாளரான மேயரின் கணவர் பொன் வசந்த் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இது கட்சிககுள் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும், அதிர்வலையையும் உண்டுபண்ணியிருக்கிறது. என்ன நடந்தது?
ஆரப்பாளையம் பகுதி திமுக செயலாளரான பொன்.வசந்த், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் ஆவார்.. 57-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தன்னுடைய மனைவி இந்திராணியை கடந்த முறை மேயர் தேர்தலில் நிறுத்தினார்... இந்திராணி பட்டப்படிப்பு முடித்துள்ளார்..

மிசா பாண்டியன் மனைவி பாண்டிச்செல்வி, முருகன் மனைவி பாமா ஆகியோரும் பிடிஆர் எப்படியும் தங்களைத்தான் மேயர் பதவிக்கு சிபாரிசு செய்வார் என்று நம்பி இருந்தனர்.. இறுதியில், இந்திராணியை பிடிஆர் தரப்பின் சிபாரிசின் பேரில் தலைமை அறிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன..
இந்திராணிக்கு முக்கியத்துவம்
இதற்கு காரணம், மதுரை மாவட்ட திமுகவில் கட்சி பொறுப்பிலும், மக்கள் பிரதிநிதியாகவும் முக்குலத்தோரில் ஒரு உட்பிரிவான பிரமலைக்கள்ளர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாததாலும்தான், இப்படியொரு வாய்ப்பு இந்திராணிக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. எனினும், இது அப்போதே கட்சிக்குள் அதிருப்தியை கிளப்பியிருந்தன.
இறுதியில், திமுக மேயர் வேட்பாளர் இந்திராணி பொன்வசந்த் போட்டியின்றி மதுரை மாநகராட்சியின் 8-வது மேயரானார்.. பதவி பிரமாணத்தில் பங்கேற்க பிடிஆர் சென்னையில் இருந்து, மதுரைக்கு வந்து கலந்து கொண்டதுடன், செங்கோல் கொடுத்து வாழ்த்து கூறியிருந்ததும் நினைவிருக்கலாம்.
திடீர் சஸ்பெண்ட் நடவடிக்கை
இப்படிப்பட்ட சூழலில் மேயரின் கணவர் பொன் வசந்த் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்... முதல்வர் ஸ்டாலின் மே 31ல் மதுரை பயணிக்க உள்ள நிலையில், அமைச்சர் தியாகராஜனின் தீவிர ஆதரவாளரான பொன் வசந்த் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேயரின் கணவர் பொன் வசந்த் மீது, வீடு கட்ட அனுமதி, அரசு பணிகள் ஒப்பந்தம், கடை அனுமதி என பல விஷயங்களில் புகார்கள் மேலிடத்துக்கு சென்றவண்ணம் இருந்தன.. அதாவது ஒரு மேயர் போலவே பொன்வசந்த் செயல்படுவதாக தலைமைக்கு அடிக்கடி புகார்கள் சென்றுள்ளது.
இதனிடையே, மதுரையில் ஜூன் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் பொதுக் குழு கூட்டம் நடக்கிறது. அதை முன்னிட்டு, மாவட்ட செயலாளர்களான அமைச்சர் மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோர் கடந்த மே 23 ல் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தியிருந்தனர்..
கணவர்தான் காரணமா?
ஆனால் அதே நாள், அதே நேரத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை மேயர் இந்திராணி நடத்தினார். இந்த கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். அப்படியிருந்தும்கூட, அதிமுக ஆதரவுடன் கூட்டத்தை நடத்தி தீர்மானங்களையும் நிறைவேற்றினார் மேயர் இந்திராணி.
மேயரின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் அவரது கணவர் பொன் வசந்த் உள்ளதாக சலசலப்புகளும் புகார்களும் எழுந்தன. இப்பப்பட்ட சூழலில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி பொன் வசந்த் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திடீர் சலசலப்பு
மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 1ம் தேதி நடப்பதால், இதற்காக மே 31ம் தேதியே முதல்வர் ஸ்டாலின் மதுரை செல்ல உள்ளார். முதரையில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உளளார்..
இதற்கான விழா ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக இருக்கும் நிலையில் அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது, பெரும் சலசலப்பை கட்சிக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications