ஆதாரில் பிறந்த தேதி, பெயர் சிக்கல்.. ஐகோர்ட்டில் மொத்தமாக எழுந்த வக்கீல்கள்.. நடந்த நல்ல விஷயம்
மதுரை: ஐகோர்ட்டில் இருந்த பல வக்கீல்கள் நேற்று எழுந்து தென்மாவட்டங்கள் அனைத்துக்கும் மதுரையில் உள்ள ஆதார் மையம் மட்டுமே உள்ளது. அதாவது ஆதார் அட்டையில் பிறந்ததேதி, பெயர் மாற்றத்துக்கு மதுரை சேவை மையத்துக்கு வந்து நீண்டநேரம் வரிசையில் காத்திருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாவதாக கூறினார்கள். இதையடுத்து மக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதார் சேவை மையம் செயல்பட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தினார்.
ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது என்பது மிக எளிதான காரியம் அல்ல..அதுவும் பிறந்த தேதியிலோ அல்லது பெயரிலோ திருத்தம் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் கற்பனை செய்ய முடியாத சிக்கலை சந்திக்க வேண்டியதிருக்கும். ஏனெனில் உங்கள் பெயரில் ஆதாரில் இனிஷியல் இருக்கும். குழந்தைக்கு இருக்காது.

அதை மாற்ற வேண்டும் என்றால், பிறப்பு சான்றிதழை மாற்ற சொல்வார்கள். ஆனால் நடைமுறையில் ஒராண்டிற்கு மேல் ஆன பிறப்பு சான்றிதழை திருத்துவது எளிதானது இல்லை.. இந்த சிக்கல் ஒருபுறம் எனில், பெயரில் அல்லது பிறந்த தேதியில் தவறு நடந்தால், மாற்றுவது மிகவும் கடினம், ஆதார் சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டும். அங்கு பல மணி நேரம் காத்திருக்கும் நிலை இருக்கும். இதுதான் எதார்த்தமாக இருக்கிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த புஷ்பம், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், எனக்கு இப்போது 74 வயதாகிறது. என்னுடைய கணவர், முன்னாள் ராணுவ வீரர். கடந்த மே மாதம் இறந்து விட்டார். இதனால் அவருக்கான ஓய்வூதியத்தை எனக்கு வழங்கும்படி விண்ணப்பித்தேன். ஆனால் என் ஆதார் அட்டையில் பிறந்த தேதி, பெயரில் முரண்பாடு இருப்பதால் சரிசெய்து வருமாறு அறிவுறுத்தினார்கள். இதற்காக பலமுறை விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் எனது பெயர் மற்றும் பிறந்த தேதியில் குளறுபடியை சரிசெய்து தர உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், மேற்கூறிய பிழைகளை சரி செய்ய பலதரப்பினரிடம் முறையிட்டும் மனுதாரருக்கு பரிகாரம் கிடைக்கவில்லை. ஆதார் அட்டை ஒரு தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக மாறி இருக்கிறது.
முறையான ஆதார் அட்டை இல்லாததால் ஒருவர் பல்வேறு சலுகைகள் மற்றும் சேவைகளை இழக்க நேரிடும். அதற்கு மனுதாரரின் வழக்கு சிறந்த உதாரணம். அவரது கணவர் இறந்த உடனேயே மனுதாரருக்கு குடும்ப ஓய்வூதியத்தை வழங்கி இருக்க வேண்டும். ஆதார் அட்டையில் உள்ள முரண்பாடு காரணமாக 5 மாதமாக அவர் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.
அவர் எந்த மையத்துக்கு செல்ல வேண்டும் என்று கேள்வி எழுந்தபோது, மதுரையில் உள்ள ஆதார் சேவை மையத்துக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.. உடனடியாக மனுதாரருக்கு உதவுமாறு மதுரை ஆதார் சேவை மையத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். அப்போது நீதிமன்றத்தில் இருந்த பல வக்கீல்கள் எழுந்து தென்மாவட்டங்கள் அனைத்துக்கும் மதுரையில் உள்ள ஆதார் மையம் மட்டுமே உள்ளது. அதாவது ஆதார் அட்டையில் பிறந்த தேதி, பெயர் மாற்றத்துக்கு மதுரை சேவை மையத்துக்கு வந்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர் என கூறினார்கள்.
அப்போது நீதிபதி கூறும் போது, தமிழகத்தில் 4,056 ஆதார் சேர்க்கை மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் ஆதார் தகவல்களை மாற்றம் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். தமிழகத்தில் வருகிற மார்ச் மாதத்துக்குள் 28 இடங்களில் ஆதார் சேவை மையம் திறக்கப்படும் என ஆதார் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த திட்டம் மக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஆதார் சேவை மையம் இருக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. கூடுதல் ஆதார் சேவை மையங்கள் அமைய 6 மாதங்கள் உள்ளன. அதுவரை மனுதாரரை காத்திருக்குமாறு கூறமுடியாது. மனுதாரர் மதுரை ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டும். அவருக்கான வசதிகளை ஆதார் மைய அதிகாரிகள் செய்து தர வேண்டும். அதன் பிறகு குடும்ப ஓய்வூதிய ஆவணங்களில் மாற்றம் செய்ய வேண்டும்" இவ்வாறு கூறினார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications