GHல் மயங்கி விழுந்த ரவுடி பேபி சூர்யா.. சிக்காவுடன் ஷேர் ஆட்டோவில் அழைத்து சென்ற மதுரை போலீஸ்
மதுரை: ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன் என பெண்ணை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி பேபி சூர்யா, மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்தபோது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையை சேர்ந்தவர் பெண் யூடியூபர். இந்த நிலையில் ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் என்கிற சிக்கா, சூசை மேரி, ஹரிகுமார் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தனது ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டுவதாகவும் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி 4 பேர் மீதும் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் 4 பேரையும் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரையில் வைத்து ரவுடி பேபி சூர்யாவையும் சிக்காவையும் கைது செய்தனர்.
இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது திடீரென சூர்யா மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சூர்யாவையும் சிக்கந்தரையும் போலீஸார் ஷேர் ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையும் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவரையும் சிக்காவையும் கைது செய்தனர். அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
அதில் 1 ஆண்டு சிறையில் இருந்துவிட்டு தற்போதுதான் ஜாமீனில் வந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி பேபி சூர்யா, தான் ஏன் விபச்சாரத்திற்கு வந்தேன், தனது கடந்த கால வாழ்க்கை என்ன என்பது குறித்து சில தகவல்களை பேசினார். பின்னர் பாலியல் தொழிலுக்காக சிங்கப்பூர் வரை சென்றதாகவும் அவர் அளித்த பேட்டி வைரலானது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ரவுடி பேபி சூர்யா, சிக்கா ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications