நாளை முதல் காத்திருப்பு போராட்டம்.. மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு
மதுரை: தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தமிழக அரசு கையாண்ட விதம் குறித்து, திமுக கூட்டணி கட்சிகள் கடும் விமர்சனங்களை அடுக்கியிருக்கின்றன. இந்நிலையில் நாளை முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடர இருப்பதாக மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்டு மொத்தம் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் இருக்கின்றன. இதில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நடந்த சில நாட்களாகவே தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தூய்மை பணியை தனியார் மயமாக்க வழி வகை செய்யும் அரசாணை எண் 152ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

தவிர, தூய்மை பணியாளர்களான தங்களுக்கு அரசாணை 62(2D)ன் படி தினசரி ஊதியமாக ரூ.754 வழங்க வேண்டும், தங்களுக்கான உபகரணங்களை வழங்க வேண்டும், தூய்மை பணியை அவர்லேண்ட் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததை திரும்ப பெற வேண்டும், அரசே தூய்மை பணிகளை ஏற்று நடத்த வேண்டும், அரசு அறிவித்துள்ள பண பலன்களை கொடுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் மதுரை மாநகராட்சி தலைமை அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், நாளை முதல் மீண்டும் இக்கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்த இருப்பதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்திருக்கின்றனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நடத்த இருப்பதாக அவர்கள் அறிவித்திருக்கின்றனர்.
இந்த போராட்டம் தமிழக அரசுக்கு நெருக்கடியை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக தொழிற்சங்க விஷயங்களில் தமிழக அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டத்தை தமிழக அரசு கையாண்ட விதமும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தனது. திமுக கூட்டணி கட்சிகளான சிபிஎம், சிபிஐ இந்த நடவடிக்கைகளை கடுமையான விமர்சித்திருக்கின்றன. மறுபுறும் திருமாவளவன் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருக்கிறார்.
இந்த சூழலில் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் போராட்டம் தமிழ்நாடு அரசியல் தளத்தில் பேசு பொருளாகியுள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
திருப்பரங்குன்றம் தீபம்.. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலுக்கு தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications