150 வயது வரை வாழணுமா? என்னை முதல்வராக்குங்கள்.. வித்தையை சொல்லி தரேன்.. சீரியஸாக சொன்ன சரத்குமார்
மதுரை: தமிழக சட்டசபை தேர்தலில் என்னை முதல்வராக்கினால் 150 வயது வரை உயிருடன் இருக்கும் வித்தையை கற்றுத் தருவேன் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தம் சுற்றுச்சாலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7ஆவது பொதுக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்க பொதுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த கூட்டத்தில் சரத்குமார் பேசுகையில் தீர்மான விளக்கக் கூட்டத்தில் உங்கள் நாட்டாமை முதல்வராக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்.
2026 ஆம் ஆண்டு தேர்தலின் போது தெரிய வரும். மது உடல்ஆற்றலை இழக்க செய்து மன அழுத்தத்தை உண்டாக்கி வருகிறது. பல்வேறு போதைகள் இன்று பரிணமித்து கஞ்சா, குட்கா போன்ற பலவகை உருவெடுத்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் பணியும் தரமாக நடைபெற்று வருகிறது. 2025-ஆம் ஆண்டு இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக உருவாகும்.

இதை முறியடிக்கவும் இளைஞர்களின் மூளையை மழுங்கடிக்கச் செய்யவும் வெளிநாடு சதி செய்கிறது. எனக்கு 69 வயது ஆகிறது. ஆனால் 25 வயது இளைஞரை போல் இருக்கிறேன். இன்னும் 150 வயது வரை உயிருடன் இருப்பேன். அது எப்படி சார் முடியும் என்றால் நிச்சயமாக முடியும். இதற்கான வித்தையை கற்று உள்ளேன். இதை எப்போது சொல்வேன் என்றால் என்னை 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முதல்வராக்கினால் அந்த வித்தையை சொல்லித் தருகிறேன்.
தமிழகத்தில் எத்தனை மதுக்கடைகள் இருந்தாலும் தனிமனித ஒழுக்கத்துடன் மதுவை புறக்கணித்தால் மட்டும் போதும். தானாகவே கடைகள் மூடப்பட்டுவிடும். பள்ளி சிறுவர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதை நானே பார்த்துள்ளேன். அவர்கள் கண்காணிப்பதுடன் போதை பொருள்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவிலேயே தலைசிறந்த கல்வி தமிழகத்தில் வழங்கப்படுகிறது. அறிவு ஆற்றல் திறமை படைத்தோர் தமிழகத்தில் இருந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருந்தும் ஏன் இந்த தடுமாற்றம். மதுவை ஒழிப்போம் என்கிறார்கள். ஆனால் இன்னும் தமிழகம் தள்ளாடுகிறது. சோஷியல் டிரிங்கிங் என்ற பெயரில் பணியிடங்களில் வெளிநாட்டு கலாச்சாரங்களை இளைஞர்களை தவிர்க்க வேண்டும்.
மாலை நேரத்தில் வேலைக்கு பிறகு வீட்டுக்கு தாமதமாக வரும் பிள்ளைகளை பெற்றோர்கள் ஊத சொல்லி சோதனை செய்யுங்கள். அதில் தவறே இல்லை. இந்தியாவில் மது இல்லாத மாநிலங்கள் உள்ளன. அங்கெல்லாம் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவை தவிர்ப்போம் என்பதை முன்னெடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவோம்.
மது கடைகளை மூடுங்கள் என சொல்லி ஆர்ப்பாட்டம் செய்வதால் எந்த பயனும் இல்லை. கடைக்கு போகாமலிருந்தாலே போதும். 2026 ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சி ஆட்சியில் அமரும் போது மது ஒழிக்கப்படும். பள்ளிச் சிறுவர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதை நானே பார்த்துள்ளேன். அவர்களை கண்காணிப்பதுடன் போதை பொருட்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்போது ஐடி துறை வந்ததோ , விஞ்ஞான வளர்ச்சி வந்ததோ கம்யூனிகேஷன் அதிகரித்ததோ மொபைல் போன் வந்ததோ அப்போதே உலகில் நடக்கும் விஷயங்களை கற்றுக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுவிட்டது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications