சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு.. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஜாமீன் இல்லை- ஹைகோர்ட் அதிரடி
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். செல்போன் கடை நடத்தி வந்த இவர்கள் இருவரையும் கொரோனா ஊரடங்கின் போது அதாவது, கடந்த 2020 ஜுன் மாதம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் போலீசார் அடித்ததில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் என 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் எஸ்எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஜாமீன் கோரி மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியானது. இதனிடையே, ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என சிபிஐ, மற்றும் ஜெயராஜ் மனைவி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்கினால் தற்போது வேகமாக நடந்து வரும் விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஸ்ரீதர் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications