சாத்தான்குளத்தில் தந்தை மகனை அடித்து கொன்றவர்கள் இவர்கள்தான்!.. சிறையிலிருந்து நீதிபதிக்கு ஏ1 கடிதம்
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி ஒரு விசாரணைக்காக போலீஸார் அழைத்து சென்றதாக தெரிகிறது.
போலீஸின் கஸ்டடியில் இருந்த தந்தையும் மகனும் திடீரென உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது தந்தை மகனை போலீஸாரே சித்ரவதை செய்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

10 பேர் கைது
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர். இதில் பால்துரை என்பவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார். எனவே ஸ்ரீதர் உள்பட 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

திடீர் திருப்பம்
இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கின் திடீர் திருப்பமாக முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் புதிய தலைமுறை சேனலுக்கு கிடைத்துள்ளது.

ஏ2 முதல் ஏ9 வரை
அந்த கடிதத்தில் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட ஏ2 முதல் ஏ9 வரை உள்ளவர்களே தந்தையையும் மகனையும் அடித்து கொன்றுள்ளனர். இந்த விவகாரத்தில் நான் எதையும் செய்யவில்லை. நான் ஒவ்வொரு வழக்கு விசாரணையின் போதும் உண்மையை பேசி வருவதால் அவர்கள் 8 பேரும் மீது கோபத்தில் உள்ளனர்.

கொலை செய்ய சதி
கடந்த மார்ச் 26 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு தந்தை மகனை அடித்து கொன்றது போல என்னையும் கொலை செய்ய முயற்சித்தனர். மேலும் நீதிமன்றத்தில் வாகனத்தில் அழைத்து செல்லும் போதெல்லாம் அந்த 8 பேரும் சேர்ந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டி வருகிறார்கள். எனவே என்னை இனி தனி வாகனத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல உத்தரவிட வேண்டும். எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்தவர்களில் பெரும்பாலானோர் ஸ்ரீதருக்கு எதிராக சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications