மதவாத கட்சி பாஜக.. மோடி எங்களை ஏமாற்ற பார்க்கிறார்! பெரியார் வழிவந்தவர்கள் தமிழர்கள் - செல்லூர் ராஜு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதத்தை சொல்லியும், சாதியை சொல்லியும் மக்களை பிரிக்கும் மதவாத கட்சியான பாஜகவை என்றைக்கும் தமிழ்நாட்டிற்குள் நுழையவே விடக் கூடாது என்று தெரிவித்து உள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

2024 மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் அரசியல் கட்சிகள், பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தி இப்பொழுதே தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கி இருக்கின்றன. இந்தக் கூட்டங்களில் அரசியல் கட்சிகள் மற்ற கட்சிகள் மீது சரமாரியான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக அதிமுக பாஜக இடையே காரசாரமான வார்த்தை மோதல் தொடர்ந்து வருகின்றன. அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு ஜெயக்குமார் சிவி சண்முகம் உள்ளிட்டோர் பாஜகவை காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

Sellur Raju has said that BJP religious party that divides people on the basis of religion

இந்த நிலையில், மதுரை மாவட்டம் விளாங்குடி அருகே கோயில் பாப்பாகுடி கிராமத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாஜக மீது சரமாரியான விமர்சனங்களை முன் வைத்தார். மறைந்த அதிமுக தலைவர்களும் முன்னாள் முதலமைச்சர்களுமான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை பாராட்டிய பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசாமலே இருக்கிறார் என்றும் பாஜகவை மதவாத கட்சி எனவும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சி செய்வதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

நமது தலைவரை பாராட்டிய இதே மோடி இன்று எடப்பாடி பழனிசாமி பற்றி பேசாமல் இருக்கிறார் என்றால் அவருக்கு தெரிந்து விட்டது, தமிழ்நாடு மக்கள் இரட்டை இலைக்கு தான் வாக்களிப்பார்கள் என்று. அந்த மக்களை ஏமாற்றி எப்படியாவது நாம் பாஜகவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்லி இன்று மோடிஜியே நம்மை ஏமாற்ற பார்க்கிறார். நாங்கள் எத்தனுக்கு எத்தன். வில்லாதி வில்லன் தமிழ்நாடு மக்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா வழிவந்த தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் பாஜக என்ற மதவாத இயக்கத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள். இன்று மதத்தை சொல்லி சாதியை சொல்லி மதத்தால் மக்களை பிரிக்கின்ற அந்த கட்சியை நாம் நுழையவே விடக்கூடாது." என்று தெரிவித்தார்.

முன்னதாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, " தேர்தலுக்காகவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து பேசினார். மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்பதை மோடி மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார். அண்ணாமலைதான் அதிமுக பாஜக பிரிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது. ஜெயலலிதாவை விட தன்னுடைய தாய் ஆயிரம் மடங்கு ஆற்றல் மிக்கவர் என அண்ணாமலை திருவாய் மலர்ந்தார். பாஜக - அதிமுக உறவு உடைவதற்கு அதுவே காரணம். அண்ணா, பெரியார் குறித்து அண்ணாமலை அவதூறாக பேசி இருக்கிறார். மோடி பேசியதை கேட்டாவது தம்பி அண்ணாமலை திருந்த வேண்டும் மறைந்த தலைவர்கள் பற்றி அவதூறாக பேசக்கூடாது." என்று கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+