புளியோதரைக்கு புலம்பலா.. அஷ்டலட்சுமியே நேரில் வந்தாலும்.. குறை சொல்வாங்க.. சொல்வது செல்லூர் ராஜூ
மதுரை: அஷ்டலட்சுமியே நேரில் வந்தாலும் மூக்கு முழி சரியில்லை என்றுதான் குறை சொல்வார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை அதிமுக மாநாட்டில் பத்து அண்டா புளியோதரை கொட்டி வீணாக்கப்பட்டதற்கு இப்படி புலம்பலாமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் செல்லூர் ராஜூ.
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொன்விழா எழுச்சி மாநாட்டில் உணவு டன் கணக்கில் கொட்டி வீணடிக்கப்பட்டது. அண்டா அண்டாவாக புளியோதரை கொட்டப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டமு. இது தொடர்பான புகைப்படங்கள் செய்திகளிலும், சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. உணவை வீணடித்தது பற்றி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்தனர்.

இதற்கு அதிமுகவினரும் முன்னாள் அமைச்சர்களும் விளக்கம் அளித்தனர். அதிமுக மாநாட்டின் வெற்றியை பொருத்துக்கொள்ள முடியாமல் சில அண்டா புளியோதரையை வீண் அடித்ததை பெரிது படுத்துவதாக கூறினர்.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மதுரையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி, சிக்கன் 65 உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது. ஏராளமானோர் குடும்பத்தோடு வந்து பிரியாணி விருந்து சாப்பிட்டனர்.
விருந்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். அதிமுக மாநாட்டில் உணவு வீணடிக்கப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த செல்லூர் ராஜூ, ''ஒரு கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது, வீட்டில் காது குத்து நிகழ்ச்சி நடக்கிறது என்றால் சாம்பார், ரசம் எல்லாம் சரியாக இருக்கிறதா? சாம்பார், கூட்டு, ரசம் செய்யும் பொழுது சமையல்காரர்கள் ஏதாவது தவறு செய்து விடுகிறார்கள். அதுவா பெரிது?
மாநாடுக்கு வருகிற அனைவருக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்று சொல்லும் தியாக மனப்பான்மை படைத்தவர் எடப்பாடி பழனிசாமி. மூன்று சமையல் கூடங்கள்; 300 கவுண்டர்களில் உணவு கொடுக்கிறோம் ஏதோ ஒரு கவுண்டரில் 10 அண்டா உணவு இப்படி ஆகிவிட்டது என்றால் குறை சொல்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்வார்கள். அப்படியே அஷ்டலட்சுமியே நேரில் வந்தாலும் அஷ்டலட்சுமிக்கு மூக்கு சரியில்ல பார்த்தியா முடி சரியில்லையே என குறை சொல்பவர்கள் எல்லா காலத்திலும் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்று கூறினார் செல்லூர் ராஜூ.
எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித் தமிழர் என்ற பட்டம் தருவது மேடையில் ஏறிய பிறகுதான் எங்களுக்கே தெரியும் என ஆதீனத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லி உள்ளார்களே என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, ஒரு ஊடகத்தில் மட்டும் அதை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது தவறான தகவல். யாருக்கும் சொல்லாமல் எதையும் செய்ய முடியாது என்றார்.
புரட்சித் தமிழன் என்ற பட்டம் என்னையா பட்டம் மக்கள் கொடுப்பதுதான் பட்டம். தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்லோருமே எதிர்க்கட்சி நடத்தக்கூடிய மாநாட்டில் வந்து கூடியிருக்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் கூட லட்சக்கணக்கான பேர் வந்திருக்கிறார்கள் என்றால் பட்டத்தை பற்றி எல்லாம் கவலை இல்லை என்றும் செல்லூர் ராஜூ கூறினார்.
அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணடிக்கப்பட்டதற்கு 'ஆங்காங்கே சிதறிக் கிடந்த உணவை பெரிதாய் காட்டுகிறார்கள்' என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்திருந்தார். ஒப்பாரி வைக்கிறார்கள் என்றும் உதயகுமார் கூறியிருந்த நிலையில், பிரியாணி விருந்து போட்டு புளியோதரை வீணாகப்போனதற்கு அஷ்டலட்சுமியை வைத்து புது விளக்கம் கொடுத்துள்ளார் செல்லூர் ராஜூ.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications