கடன் மோசடி என பொத்தாம் பொதுவாக பேசி... கடன் பெற்ற விவசாயிகளை கொச்சைப்படுத்தக் கூடாது -செல்லூர் ராஜூ
மதுரை: கூட்டுறவு சங்கங்களில் கடன் மோசடி என பொத்தாம் பொதுவாக பேசுவதை திமுக அரசு கைவிட வேண்டும் என்றும் அப்படி என்ன முறைகேடு நடந்துவிட்டது எனவும் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வினவியுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களில் கடன்பெற்ற விவசாயிகளையும், பொதுமக்களையும் குற்றம் சுமத்தி பேசும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களில் நகை/ பயிர் கடன் மோசடி நடைபெற்றுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறி வரும் நிலையில் அவருக்கு சவால் விடுக்கும் வகையில் செல்லூர் ராஜூ தனது தரப்பு கருத்தை அறிக்கையாக பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது;

வேளாண் பெருமக்கள்
''வேளாண் பெருமக்கள் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு அடையும் போது, பயிரிட்ட வேளாண் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் நஷ்டத்திற்கு உள்ளாகும் போது விவசாயிகளின் சிரமத்தில் பங்குக் கொள்ளும் வகையில் அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாங்கிய கடன்களுக்கு வட்டி தள்ளுபடி, கடன் தள்ளுபடி என நிலைமைக்கு தக்கவாறு அரசு முடிவெடுக்கும்.''

2 ஆண்டுகள்
''கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். எனவே தான் 'விவசாயக் கடன் தள்ளுபடி' என அதிமுக அரசு அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டது. மேலும், வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக தான் வெளியிடப்பட்டது.''

தேர்தல் வாக்குறுதி
''திமுக தேர்தல் வாக்குறுதியிலும், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் பேசும் போது குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இந்த பேச்சை நம்பி 5 சவரன் வரை குடும்பத்தில் உள்ள அனைவரும் நகைகளை வங்கிகளில் வைத்து கடன் பெற்றனர். இந்தக் குழப்பத்திற்கு காரணமே திமுக தேர்தல் வாக்குறுதி தான்.''

கொச்சைப்படுத்தி
''அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துவிட்டு தற்போது பல நிபந்தனைகளை விதித்து, நகைக்கடன் வழங்கியதில் முறைக்கேடுகள் நடந்துவிட்டதாக கூட்டுறவு சங்கங்கள் மீதும் அதன் பணியாளர்கள் மீதும் , கடன் பெற்ற பொதுமக்கள் மீது குற்றம் சுமத்தி பேசுவது அனைவரையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருக்கிறது.''

கூட்டுறவு
''நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை நிறைவேற்ற முடியாத நிலையில், மற்றவர்கள் மேல் பழிபோடுவது யார்? கூட்டுறவே நாட்டுயர்வு என்ற உன்னத நோக்கில் கூட்டுறவு இயக்கம் இன்று தமிழகம் முழுவதும் வெற்றிக்கரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.''

திமுக அரசு
''வேளாண் பயிர்ரகடன் வழங்கியதிலும் நகைக்கடன் வழங்கியதிலும் ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால், அந்த தவறுகளுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அனைத்து சங்கங்களின் மீது பொதுவாக பழி சுமத்தக்கூடாது. கிராமங்களின் மூலாதாரமான வேளாண்மை சிறந்த முறையில் இயங்குவதற்கு அடித்தளமாக விளங்கும் கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து நல்ல முறையில் இயங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.''
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications