"அட்ஜெஸ்ட்மெண்ட்" பண்ணலனா சஸ்பெண்ட்.. அறநிலைய இணை ஆணையர் மீது பாலியல் புகார்! அலறிய பெண் பணியாளர்கள்
மதுரை: மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பெண் ஊழியர்களின் கையை தொட்டு பேசியும், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யக்கூறியும் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும், மறுப்பு தெரிவித்த பெண் பணியாளர்களை சஸ்பெண்ட் செய்வதாகவும் மாநில அறநிலையத்துறை ஆணையருக்கு பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மண்டல இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையராக இருப்பவர் செல்லத்துரை. இவர் தனக்கு கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக பரபரப்பான புகார் கிளம்பி உள்ளது.

இதுதொடர்பாக மதுரை மண்டல இந்து சமய அறநிலைய துறையில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் சார்பில் தமிழக அறநிலைய துறை ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறையில் பணியாற்றும் இஓ, ஆய்வாளர், ஆய்வர், கண்காணிப்பாளர், தலைமை எழுத்தர், அசிஸ்டென்ட் என்று மொத்தம் 21 பணியாளர்கள் சேர்ந்து இந்த புகார் கடிதத்தை அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மதுரை மண்டல இந்த சமய அறநிலைய துறை இணை ஆணையர் செல்லதுரை பணியில் சேர்ந்தபோது பொதுவாக எல்லா பெண் ஊழியர்களிடமும் மிகவும் அக்கறையுடன் நடந்து கொண்டார். குடும்ப விவகாரம் குறித்து சிரித்து சிரித்து பேசுவார். நாட்கள் செல்ல செல்ல அவரது வக்கிரபுத்தியை பேச்சில் தொடங்கினார். அவரது அலுவலக அறையில் தனியாக இருக்கும்போது அருகில் வந்து பேச சொல்வார். அருகில் சென்றால் கையை தொடுவார்.
சந்தர்ப்ப சூழ்நிலையை பொறத்து ஏதாவது ஒருநாள் நாம் இருவரும் வெளியூர் சென்று வரலாம் என்று சொல்வார். இதற்கு அட்ஜெஸ்ட் பண்ற பெண் ஊழியர்கள் என்ன தவறு செய்தாலும் கண்டு கொள்ளமாட்டார். சலுகைகள் காட்டுவார். செல்லத்துரை பேசும்போது முகம்சுழிக்கும் பெண் பணியாளர்கள் மிரட்டப்படுவதுடன் நான் சொன்னபடி கேட்கவில்லை என்றால் நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்வேன் என்று கூறுவார். அடிக்கடி ஆய்வு மேற்வாளர்கள். அதன்படி பெண் ஊழியரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
எனவே கனம் உயர் அதிகாரிகள் ரகசிய விசாரணை செய்தால் பெண் ஊழியர்கள் வாக்குமூலம் கொடுக்க தயாராக உள்ளோம். செல்லத்துரை அறநிலைய துறையில் இருக்கும் வரை பெண்கள் சுதந்திரமாக பணிபுரிய இயலாது. இந்த கெடூர குணம் படைத்த நாசகாரசன் செல்லத்துரையை டிஸ்மிஸ் செய்யும்படி பணிந்து பாதம் தொட்டு வணங்கி கேட்டு கொள்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications