Madurai, Sivagangai, Ramanathapuram: மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் எவ்வளவு வாக்காளர்கள்
மதுரை: மதுரை மாவட்டத்தில் 3,80,474 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 27,40,631 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு இவர்களில் 3,80,474 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது மதுரை மாவட்டத்தில், 23,60,157 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அதற்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்) நவ.4 ல் துவங்கி டிச.14 ஆம் தேதி முடிவடைந்தது. இப்பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் மொத்தமாக 27,40,631 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு இவர்களில் 3,80,474 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது மதுரை மாவட்டத்தில், 23,60,157 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அதாவது, எஸ்.ஐ.ஆருக்கு பிறகு 13.90% வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் முன்பு 12,29,933 வாக்காளர்கள் இருந்த நிலையில், அவர்களில் 1,50,828 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது, சிவகங்கை மாவட்டத்தில் 10,79,105 வாக்காளர்கள் உள்ளனர். சிவகங்கையில் 12.26% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பு 12,08,690 வாக்காளர்கள் இருந்த நிலையில், அவர்களில் 1,17,364 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 10,91,326 வாக்காளர்கள் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 9.71% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications