20 ஆண்டுகள் பழைய கேஸை தூசி தட்டும் கேரள அரசு.. ஞானேஷ் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைக்கு வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தலைமை தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஞானேஷ் குமார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கேரள அரசு தற்போது தூசி தட்டி எடுத்திருக்கிறது.

இந்த பழைய கேஸை விசாரிப்பதன் மூலம் ஞானேஷ் குமாருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை பெற்று தர முடியும் என்று சொல்லப்படுகிறது.

Gyanesh Kumar

என்ன கேஸ் அது?

கடந்த 2006ம் ஆண்டு உலக வங்கியின் நிதியுதவியுடன் கேரள மாநில போக்குவரத்து திட்டத்தின் கீழ், சுமார் ரூ.215 கோடி மதிப்பில் எம்.சி சாலையை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த திட்டத்தை 'PATI-BEL' என்ற இந்தோ-மலேசிய கூட்டு கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து நடத்தியது.

இந்த மெகாதிட்டத்தின் முதன்மை திட்ட மேலாளராக மலேசியாவை சேர்ந்த சிவில் என்ஜினியர் லீ சீ பீன் என்பவர் பணியாற்றினார். இந்த காலத்தில்.. அதாவது 2006ல் கேரள பொதுப்பணித்துறை செயலாளராக ஞானேஷ் குமார் இருந்தார். அப்போது இந்த சாலை திட்டத்தில் கடுமையான தாமதங்களும், திட்ட செலவு அதிகரிப்புகளும் ஏற்பட்டன. திட்டத்திற்கான பல கோடி ரூபாய் பணப் பில்களை விடுவிக்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததாகவும், லீ சீ பீனுக்கு தொடர் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மலேசிய சிவில் என்ஜினியர் தற்கொலை

இது வெறும் குற்றச்சாட்டுடன் நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த லீ சீ பீன் அதே ஆண்டில் (2006) நவம்பர் மாதம் மலேசியாவின் கோலாலம்பூருக்கு திரும்பியதும் அங்கு தற்கொலை செய்துக்கொண்டார். அவர் இறப்பதற்கு முன்னதாக தனது மனைவி மற்றும் நிறுவன இயக்குநருக்கு எழுதிய தற்கொலை கடிதங்களில் அப்போதைய கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த ஞானேஷ் குமாரின் பெயரை நேரடியாக குறிப்பிட்டு, அவரது அலைக்கழிப்பே தனது தற்கொலைக்கு காரணம் என்று எழுதியிருந்தார்.

புதிய புகார்

இந்த சம்பவம் இந்தியாவின் பெயரை ரொம்பவும் டேமெஜ் செய்தது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த 2006ம் ஆண்டிலேயே இது தொடர்பாக முதற்கட்ட லஞ்ச ஒழிப்பு விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால், அதே அண்டில் கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசியல் மற்றும் வெளி அழுத்தங்கள் காரணமாக அந்த விசாரணை முறையாக நடத்தப்படாமல் அவசர அவசரமாக முடக்கப்பட்டது. தற்போது காங்கிரஸ் தலைவர் மலையின்கீழு வேணுகோபால் என்பவர், 2006ல் நடத்தப்பட்ட விசாரணை முறைகேடாக மூடி மறைக்கப்பட்டது குறித்து புதிய புகாரை அளித்துள்ளார்.

நடவடிக்கை எடுக்க முடியுமா?

இந்த மனுவை ஏற்ற கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு வழக்கை மீண்டும் முழுமையாக தோண்டி எடுத்து விரிவான விசாரணை நடத்த அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டிருக்கிறார். ஞானேஷ் குமார்தான் தற்போது தலைமை தேர்தல் ஆணையராக இருக்கிறாரே! அவருக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? என்று கேள்வி எழலாம்.

சட்டப்பாதுகாப்பு கிடைக்காது

என்னதான் தேர்தல் ஆணையராக இருந்தாலும் தற்கொலைக்கு தூண்டுதல் குற்றச்சாட்டுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. கேரள அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் அளித்த சட்ட ஆலோசனையின்படி, "ஒருவர் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையராக இருப்பதால், அவர் பொதுப்பணித்துறை செயலாளராக இருந்தபோது செய்த குற்றங்களுக்கான விசாரணையிலிருந்து தப்பிக்க எந்தவொரு சட்ட பாதுகாப்பும் அவருக்கு கிடைக்காது" என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் இந்த வழக்கை கேரள அரசு மீண்டும் கையில் எடுத்திருப்பது சலசலப்பை கிளப்பியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+