என்னாது.. எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் போகிறாரா.. ஆச்சரியப்படாதீங்க.. மாஜி சொல்றதை பாருங்க
மதுரை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் பசும்பொன் வந்து முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்துவார் என்று முன்னாள் அமைச்சர் ஆபி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை காரணமாக ஓபிஎஸ் - இபிஎஸ் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தாலும், தென் மாவட்ட தொண்டர்கள் மத்தியில் ஓபிஎஸ் பலத்தோடு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இதனை நிரூபிக்கும் வகையில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் ஓ பன்னீர் செல்வம் கலந்துகொண்டுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி குருபூஜை விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.

ஆர்பி உதயகுமார் பேட்டி
இந்த நிலையில் மதுரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு இருப்பதாக பார்க்கப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னில் இருந்து நெல்லை வரை முத்துராமலிங்கத் தேவரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவர்.

பசும்பொன்னில் இபிஎஸ்
இன்று கூட கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு நான் சென்றுதான் வந்துள்ளேன். அங்கு எந்த சலசலப்போ, எதிர்ப்போ இல்லை. அப்படி மாய தோற்றத்தை உருவாக்கி சூழ்ச்சி நடப்பது உண்மை. விரைவில் எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னிற்கு வருவார். அப்போது முக்குலத்தோர் சமூக மக்களே சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ் முயற்சி
தொடர்ந்து தேவர் ஜெயந்தி விழாவில் ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிக்க உள்ளது பற்றிய கேள்விக்கு, அதிமுகவில் அனைத்து சமுதாய மக்களின் பங்களிப்பும் இருக்கிறது. ஓபிஎஸ்-ன் பலம் என்பது சட்டமன்றத் தேர்தலின் போது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. கட்சித் தலைவராக இருந்தபோதே, அவரால் பெரும் வெற்றியை அடைய முடியவில்லை. பசும்பொன்னில் ஓபிஎஸ் தனது செல்வாக்கை நிரூபிக்கும் சூழல் இல்லை. இதுதான் நிதர்சன உண்மை. ஆனால் ஓபிஎஸ் தரப்பு பலத்தை நிரூபிக்க முயற்சிப்பார்கள் என்று தெரிவித்தார்.

இபிஎஸ் தவிர்ப்பு?
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பசும்பொன் வருவதை தவிர்க்க காரணம் என்ன என்ற கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி பசும்பொன் வருவதை தவிர்க்கவில்லை. அவர் சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ளார். இதுபோல் ஏற்கனவே ஜெயலலிதா செய்துள்ளார். இதில் எந்த தவறும் இல்லை. எடப்பாடி பழனிசாமி பசும்பொன் வராதவர் அல்ல. எங்கு வேண்டுமானாலும் மரியாதை செலுத்தலாம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications