அக்கா மகள் கல்யாணத்துக்கு லீவு இல்லை.. மன அழுத்ததில் மதுரை எஸ்ஐ வெளியிட்ட வீடியோ.. நடந்த சர்ப்ரைஸ்
மதுரை: காவல்துறையினருக்கு உரிய நேரத்தில் விடுமுறை கிடைக்காமல் மனஅழுத்தத்தில் சில நேரங்களில் உயர் அதிகாரிகளுக்கு எதிராக வீடியோ வெளியிட்டு குமுறுகிறார்கள். அப்படித்தான் மதுரையில் விடுமுறை அளிக்க இன்ஸ்பெக்டர் மறுத்ததால், ஆத்திரத்தில் சிறப்பு சார்பு - ஆய்வாளர் வீடியோ வெளியிட்டு தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
காவல்துறையில் போதிய விடுப்பு அளிக்க முடியாத, காவல்துறையில் காலிபணியிடங்கள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அதிகப்படியான வேலைப்பளு,குற்றங்கள் நடந்தால் ஏற்படும் அழுத்தங்கள், குற்றவாளிகளை உடனே கண்டுபிடிக்க சொல்லி ஏற்படும் அழுத்தங்கள். குற்றவாளிகளின் பின்னணியில் உள்ள அரசியல் பின்புலங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் போது போலீசுக்கு ஏற்படும் நெருக்கடிகள், நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டிய அழுத்தங்கள், குற்றவாளிகளின் கொடூர செயல்கள் போன்றவை காவல்துறையினரை அதிக மன அழுத்ததில் வைக்கிறது.

அப்படியான சூழலில் அவர்களுக்கு போதிய விடுமுறையும் கிடைப்பது இல்லை. அத்துடன் உயர் அதிகாரிகளின் அழுத்தம் மற்றும் மெமோ, போன்ற நடவடிக்கைளும் அவர்களின் மனஅழுத்தம் அதிகரிக்க காரணமாக உள்ளது. இதனை தாங்காமல் தவறான முடிவு எடுக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கிறது. சில நேரங்களில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக வீடியோ வெளியிடுவது, ஆடியோ வெளியிடுவது அவ்வப்போது நடக்கிறது. அப்படித்தான் மதுரையில் காவல் சிறப்பு ஆய்வாளர் மன அழுத்ததில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மதுரை மாநகர் செல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு - ஆய்வாளராக ஸ்டாலின் அப்பன் ராஜ் என்பவர் கடந்த 2 ஆண்டாக பணியாற்றி வருகிறார். இவரது சகோதரியின் மகளுக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது, இதற்காக, காவல் நிலைய ஆய்வாளரிடம் விடுப்பு வழங்கு மாறு கேட்டிருக்கிறார்.
ஆனால், செல்லூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அவருக்கு விடுமுறை தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்டாலின், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
அந்த வீடியோவில் " என்னோட சொந்த அக்கா மகளின் திருமணத்துக்கு கூட என்னால் போக முடியவில்லை. எங்களுடைய காவல் ஆய்வாளர் எதற்காக விடுப்பு தர மறுக்கிறார் எனத் தெரியவில்லை. நாங்கள் காவல்துறையில் இரவு, பகலாக உழைக்கிறோம். முக்கிய நிகழ்ச்சிக்குக் கூட போக முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகிறேன்" என்று மன அழுத்தத்தில் பேசி இருந்தார்.
இதனிடையே திங்கள்கிழமை மாலை ஸ்டாலின் அப்பன் ராஜ் மற்றொரு வீடியோவையும் பதிவிட்டிருந்தார். அதில், 'என்னை மன்னிச்சிடுங்க..
மன உளைச்சலில் அப்படி வீடியோவில் பேசி பதிவிட்டு விட்டேன். எனக்கு விடுமுறை கிடைத்துவிட்டது" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த வீடியோக்கள் மதுரை காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கும் விஷயத்தில் காவல்துறை உயர்அதிகாரிகள் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications