அன்று காவல் துறை.. நேற்று கூட்டுறவு துறை.. முக்கிய துறைகளில் முதல்வர் திடீர் விசிட்!.. பரபரத்த மதுரை
மதுரை: மதுரை கே நாட்டாபட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் ஆய்வு செய்து பயனாளிகளுக்கு பயிர் கடனுக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றது முதல் திடீர் ஆய்வுகளை நடத்தி வருகிறார். ரேஷன் கடைகள், தடுப்பூசி முகாம்கள், கொரோனா வார் ரூம்கள் என அதிரடியாக செல்லும் முதல்வர் அங்கு பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிகிறார்.
அந்த வகையில் சேலத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்றார்.

இன்ஸ்பெக்டர் நாற்காலியில் உட்கார்ந்த முதல்வர்
அங்கு காவல் துறை ஆய்வாளர் நாற்காலியில் உட்கார்ந்த முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்த கோப்புகளை ஆய்வு செய்தார். காவல் துறையினரிடமும் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களை இன்முகத்துடன் நடத்துமாறு அறிவுறுத்தினார். சுமார் 10 நிமிடங்கள் அங்கிருந்த முதல்வர் ஸ்டாலின் பின்னர் புறப்பட்டு சென்றார்.

திடீர் விசிட்
இந்த திடீர் விசிட் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அடுத்த நாள் ஒகேனக்கல் செல்லும்போது திடீரென அங்கு ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை பார்த்துவிட்டு வண்டியை நிறுத்துமாறு கூறினார். அங்கு மாணவிகளிடம் நலம் விசாரித்த முதல்வர் , நன்றாக படித்து உயர் பதவிகளை வகிக்க வேண்டும் என்றார்.

அரசு விடுதி
பின்னர் அவ்வழியாக இருந்த மாணவர்கள் அரசு விடுதிக்கு போன அவர் அங்கிருந்த உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அந்த விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவனுக்கு அன்றைய தினம் பிறந்தநாள் என்பதால் அந்த மாணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினார். இவ்வாறு தனது ஆய்வு பணிகளால் கடந்த இரு தினங்களாக முதல்வர் ஸ்டாலின் டிரென்டிங்கில் இருந்து வருகிறார்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்
மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டியில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கே நாட்டாபட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்துக்கு நேற்றைய தினம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் பயனாளிகளுக்கு பயிர்க் கடனுக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications