சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் வென்றால் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி அமைந்துள்ள இறைச்சிக் கடைகள் மூடப்படும் என்று பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று என்டிஏ கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி விளக்கம் கொடுத்துள்ளார். தனது பெயரை பயன்படுத்தி அனுமதியின்றி சிலர் தவறான தகவலை திட்டமிட்டே பரப்பி இருப்பதாகவும் சுந்தர்.சி கூறியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி சார்பாக என்டிஏ கூட்டணி வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுகிறார். மதுரை மத்திய தொகுதியில் வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக இருப்பதால், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து இயக்குநர் சுந்தர்.சி ஆதரவு கோரி வருகிறார். இவருக்காக அதிமுக தரப்பில் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி ஆகியோர் பணியாற்ற தொடங்கியுள்ளனர். அதேபோல் மதுரை மத்திய தொகுதியில் கணிசமான தொழில்களை மேற்கொண்டு வரும் செட்டியார் மற்றும் விஸ்வகர்மா சமூக நிர்வாகிகளின் ஆதரவையும் கோரி இருக்கிறார்.
சமூக ரீதியிலான வாக்குகளை தங்கள் பக்கம் மாற்ற வேண்டும் என்பதே சுந்தர்.சி தரப்பின் முதன்மை நோக்கமாக உள்ளது. மறுபக்கம் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதே தொகுதியில் 10 ஆண்டுகளாக பணியாற்றி இருக்கிறார். 3வது முறையாக இந்த தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுவதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர்.சி வென்றால், மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள இறைச்சி கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சில தகவல் வெளியாகியது. இது மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் மதுரையில் இறைச்சி கடைகளை மூடப்படும் என்று பேசினால், 1% மக்களின் ஆதரவு கூட கிடைக்காது.
இந்த நிலையில் இயக்குநர் சுந்தர்.சி விளக்கம் கொடுத்துள்ளார். அதில் சுந்தர். சி பேசுகையில், மதுரை மத்திய தொகுதியில் வென்றால் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி அமைந்துள்ள இறைச்சிக் கடைகள் மூடப்படும் என்று பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது. தனது பெயரை பயன்படுத்தி அனுமதியின்றி சிலர் தவறான தகவலை திட்டமிட்டே பரப்பி இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications