மதுரையில் பயங்கரம்... காவல்நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
மதுரை: மதுரையில் காவல்நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை போலீசார் விரட்டி பிடித்தனர்.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான அஜித் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தங்களது நண்பர் தினேஷ் என்பவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தினேஷின் கைகளை அரிவாளால் வெட்டினர்.

இந்த வழக்கு தொடர்பாக சகோதரர்கள் இருவரும் மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு வருகை தந்த போது காவல்நிலையத்தின் அருகே 200மீட்டர் தொலைவில் கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் திடிரென வந்த மர்ம கும்பல் ஒன்று சகோதரர்கள் இருவரையும் ஓட ஓட விரட்டி தாக்கினர். இதில் படுகாயமடைந்த அஜித் தலையில் பலத்த வெட்டுகாயம் பட்டத்தில் இரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
மேலும் தாக்குதலில் படுகாயமடைந்த ரஞ்சித் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொலை செய்த மர்ம கும்பல் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஆட்டோ ஒன்றில் இரத்தம் கரை படிந்த பட்டா கத்திகளுடன் பதுங்கி இருப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் 5 பேரை விரட்டி பிடித்தனர். கொலை சம்பவம் குறித்தும், பிண்ணனி குறித்தும் தல்லாகுளம் காவல்நிலையம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை கொண்டு போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் காவல்நிலையத்தின் அருகிலேயே நடந்த கொலையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications