திருப்பரங்குன்றம் வழக்கு.. தர்கா இடத்தில்தான் தீபத்தூண் உள்ளது! வக்பு வாரியம் முக்கிய வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூண் என்று கூறப்படும் தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக வக்ஃபு வாரியம் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தர்காவுக்கு சொந்தமான நிலம் எவ்வளவு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுதொடர்பான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவகர் சார்பாகவும், மாவட்ட ஆட்சியர் சார்பாகவும் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே கோயில் செயல் அலுவலர் தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று வக்ஃபு வாரியம் தரப்பின் வாதங்கள் கேட்கப்பட்டு வருகிறது. அப்போது வக்ஃபு வாரியம் தரப்பில் முபின் ஆஜராகினார். இதையடுத்து 1920 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி மலை மேல் உள்ள பகுதி தர்காவுக்கு சொந்தம். நெல்லித்தோப்பு முதல் மலை உச்சி வரை படிக்கட்டு உள்ள பகுதி தர்காவுக்கு சொந்தம் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 1920 உத்தரவுப்படி தர்காவும், அதற்கு அருகில் உள்ள நிலங்களும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மலையின் உச்சியில் தீபம் ஏற்றுவது கோயில் மரபு அல்ல என்பது 1862லேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி பழைய தீர்ப்புகளில் உறுதி செய்யப்பட்ட தரவுகளை கருத்தில் கொள்ளவே இல்லை.
அதேபோல் தீபத்தூண் என்று கூறப்படும் பகுதி தர்காவிற்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்றும், அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்றும் இதற்கு முன் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சமீப காலமாகவே தீபத்தூண் என்ற வார்த்தை உபயோகிக்கப்படுகிறது.
அதேபோல் மலை உச்சியில் தர்கா இருப்பதால், பல ஆண்டுகளாக சிக்கந்தர் மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்படி அழைக்கப்படுவதை 1920ஆம் ஆண்டு உரிமையியல் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது என்று வாதிட்டார். தொடர்ந்து நீதிபதிகள், தர்கா முழுவதும் சர்வே செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, தர்காவுக்கு சொந்தமான நிலம் எவ்வளவு இருக்கிறது? இதுகுறித்த ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications