நீதிமன்ற வழக்கு விசாரணைகளில்.. மிக அரிதான நிகழ்வு! நீதிபதிக்கு எதிராகவே கடும் வாதம் வைத்த தமிழக அரசு
சென்னை: நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு கடுமையான வாதங்களை பிறப்பித்துள்ளது. பொதுவாக நீதிமன்றத்தில் நீதிபதிக்கு எதிராக வாதங்கள் வைக்கப்படாது. ஆனால் இன்று கோர்ட்டில் அப்படி வாதங்கள் வைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு நேற்று பின்பற்றப்படவில்லை. இதற்கு எதிராக உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை நீதிபதி எடுத்தார். முக்கியமாக CISF அதிகாரிகளை அழைத்துக்கொண்டு மனுதாரர் தீபதூணுக்கு சென்று விளக்கு ஏற்றலாம், அதிகாரிகள் என்னிடம் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என்பர் உத்தரவிட்டார்.
தமிழக அரசு மேல்முறையீடு
இந்த உத்தரவுகளுக்கு எதிராக தமிழக அரசு உத்தரவிற்கு மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று தஉயர்நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணையை செய்து வருகிறது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. இதில் , தமிழ்நாட்டின் நல்லிணக்கம் பாதிப்பு அடைந்து என்று உள்ளது தமிழக அரசு பரபரப்பு வாதம் வைத்துள்ளது.

முக்கியமான வாதங்கள்
பொதுவாக நீதிமன்றத்தில் நீதிபதிக்கு எதிராக வாதங்கள் வைக்கப்படாது. ஆனால் இன்று கோர்ட்டில் அப்படி வாதங்கள் வைக்கப்பட்டது.
1 . நீதிபதிகள் மாண்புடன் செயல்பட வேண்டும். நீதிபதிகள் சட்ட ஒழுங்கு விவகாரத்தில் தலையிட கூடாது. நீதிபதிகள் சட்ட ஒழுங்கை கையில் எடுக்க நினைக்க கூடாது. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது; அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது; அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
2. எதையுமே கருத்தில் கொள்ளாமல் நீதிபதி பிறப்பித்த உத்தரவால்தான் இந்த சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும்.
3. நீதிபதி உத்தரவால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே CISF-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே, அதைத்தாண்டி அல்ல.
4. நேற்று நடந்த மோதல் சம்பவங்களை நீதிபதி சுவாமிநாதன் பார்த்தாரா என்று தெரியவில்லை. நாங்கள் பயந்தது போல நடந்துவிட்டது.
5. இந்த விவகாரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அளவிற்கு மனுதாரர் செயல்பட்டு உள்ளார், அச்சப்பட்டது போலவே இதில் நடந்துவிட்டது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்று கூறி அவமதிப்பு வழக்கு தொடுத்துவிட்டது, உடனே அதில் மாற்று உத்தரவு பிறப்பிக்க முடியாது.
6. எங்களிடம் விசாரிக்கலாம், விளக்கம் கேட்கலாம். நேற்று எப்படி உடனே மாற்று உத்தரவு பிறப்பித்தார். CISF படையுடன் செல்ல எப்படி உத்தரவு பிறப்பித்தார், என்று தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கு பின்னணி
நேற்று திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார். நேற்று மாலை இந்த வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட்டது. நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று கூறியும், தீபத்தூணில் விளக்கு ஏற்றாத காரணத்தால் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றனர். ஆனால் போலீஸ் அவர்களை அனுமதிக்காத நிலையில் CISF வீரர்களுடன் செல்லுமாறு மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார் இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று CISF வீரர்களை அழைத்துக்கொண்டு பல்வேறு இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வந்தனர். ஆனால் அவர்களை அனுமதிக்காத போலீஸ் அதிகாரிகள் We're not allowing...We'll face the consequences என்று குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications