1862 ஆம் ஆண்டு முதல் தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை; நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார் - அரசு வாதம்
சென்னை: தீபத்தூண் கோவிலை விட பழமையானதா? கோவிலை முக்கியமானதா? என்று நீதிபதிகள் இன்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு தமிழக அரசு கொடுத்த பதில் கவனம் பெற்றுள்ளது.
தீபத்தூண் கோவிலை விட பழமையானதா? கோவிலை முக்கியமானதா? என்று நீதிபதிகள் இன்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு தமிழக அரசு அளித்த பதிலில், தீபத்தூண் பழமையானதா என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் அது வெறும் தூண், அவ்வளவுதான், கோவிலில் விளக்கு ஏற்றுவதே பாரம்பரியம் என்று அரசு தரப்பு பதில் அளித்துள்ளது.
100 ஆண்டுகளாக அந்த தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை. 1862ல் இருந்தே இந்த தூண் பயன்பாட்டில் இல்லை. அதை நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார். 100 ஆண்டுகள் வழக்கத்தை ஒரு நொடியில் மாற்ற சொல்லி இருக்கிறார் நீதிபதி. ஒரு இடத்தில ஒரு தீபம்தான் ஏற்ற முடியும், எல்லா இடங்களிலுமே ஏற்ற முடியும்? தீபத்தூணில் விளக்கு ஏற்றுவது கோவில் நிர்வாக கடமை என்றார் நீதிபதி, ஆனால் அது கட்டாயம் இல்லை என்றும் தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.

திருப்பரங்குன்றம் வழக்கு பின்னணி
நேற்று நடந்த மோதல் சம்பவங்களை நீதிபதி சுவாமிநாதன் பார்த்தாரா என்று தெரியவில்லை. நாங்கள் பயந்தது போல நடந்துவிட்டது. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது; அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது; அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
நீதிபதி உத்தரவால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே CISF-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே, அதைத்தாண்டி அல்ல.
நீதிபதிகள் மாண்புடன் செயல்பட வேண்டும். நீதிபதிகள் சட்ட ஒழுங்கு விவகாரத்தில் தலையிட கூடாது. நீதிபதிகள் சட்ட ஒழுங்கை கையில் எடுக்க நினைக்க கூடாது. எதையுமே கருத்தில் கொள்ளாமல் நீதிபதி பிறப்பித்த உத்தரவால்தான் இந்த சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அளவிற்கு மனுதாரர் செயல்பட்டு உள்ளார், அச்சப்பட்டது போலவே இதில் நடந்துவிட்டது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்று கூறி அவமதிப்பு வழக்கு தொடுத்துவிட்டது, உடனே அதில் மாற்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. எங்களிடம் விசாரிக்கலாம், விளக்கம் கேட்கலாம். நேற்று எப்படி உடனே மாற்று உத்தரவு பிறப்பித்தார். CISF படையுடன் செல்ல எப்படி உத்தரவு பிறப்பித்தார், என்று தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கு வரலாறு என்ன?
நேற்று திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார். நேற்று மாலை இந்த வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட்டது. நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று கூறியும், தீபத்தூணில் விளக்கு ஏற்றாத காரணத்தால் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றனர். ஆனால் போலீஸ் அவர்களை அனுமதிக்காத நிலையில் CISF வீரர்களுடன் செல்லுமாறு மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார் இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று CISF வீரர்களை அழைத்துக்கொண்டு பல்வேறு இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வந்தனர். ஆனால் அவர்களை அனுமதிக்காத போலீஸ் அதிகாரிகள் We're not allowing...We'll face the consequences என்று குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications