நீதிபதி சுவாமிநாதனை விமர்சனம் செய்த தமிழக அரசு! ஏற்க மறுத்த நீதிபதிகள்! அரசுக்கு எதிராக போன வழக்கு
சென்னை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய இரு நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்து உள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி சுவாமிநாதன் மீண்டும் விசாரிப்பார் என்று இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இன்று என்ன நடந்தது என்று இங்கே பார்க்கலாம்.
வழக்கு பின்னணி என்ன?
இன்று நடந்தது திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி அல்ல.. மாறாக இதை பின்பற்ற தவறிய மாவட்ட நிர்வாகம் மீது அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டதாக மாவட்ட நிர்வாகம் மீது அவமதிப்பு முறையீடுகள் செய்யப்பட்டது. அதற்கு எதிராக மாவட்ட நிர்வாகம் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில்தான் விசாரணை செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு நேற்று பின்பற்றப்படவில்லை. இதற்கு எதிராக உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை நீதிபதி எடுத்தார். முக்கியமாக CISF அதிகாரிகளை அழைத்துக்கொண்டு மனுதாரர் தீபதூணுக்கு சென்று விளக்கு ஏற்றலாம், அதிகாரிகள் என்னிடம் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என்று உத்தரவிட்டார்.
தமிழக அரசு மேல்முறையீடு
இந்த உத்தரவுகளுக்கு எதிராக தமிழக அரசு உத்தரவிற்கு மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று தஉயர்நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணையை செய்தது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணை செய்தது. இதில் , தமிழ்நாட்டின் நல்லிணக்கம் பாதிப்பு அடைந்து என்று உள்ளது தமிழக அரசு பரபரப்பு வாதம் வைத்துள்ளது. நேற்று நடந்த மோதல் சம்பவங்களை நீதிபதி சுவாமிநாதன் பார்த்தாரா என்று தெரியவில்லை. நாங்கள் பயந்தது போல நடந்துவிட்டது. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது; அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது; அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
நீதிபதி உத்தரவால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே CISF-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே, அதைத்தாண்டி அல்ல.
நீதிபதிகள் மாண்புடன் செயல்பட வேண்டும். நீதிபதிகள் சட்ட ஒழுங்கு விவகாரத்தில் தலையிட கூடாது. நீதிபதிகள் சட்ட ஒழுங்கை கையில் எடுக்க நினைக்க கூடாது. எதையுமே கருத்தில் கொள்ளாமல் நீதிபதி பிறப்பித்த உத்தரவால்தான் இந்த சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும்.
நீதிபதிக்கு எதிராவே வழக்கில் கடும் வாதம்
இந்த விவகாரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அளவிற்கு மனுதாரர் செயல்பட்டு உள்ளார், அச்சப்பட்டது போலவே இதில் நடந்துவிட்டது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்று கூறி அவமதிப்பு வழக்கு தொடுத்துவிட்டது, உடனே அதில் மாற்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. எங்களிடம் விசாரிக்கலாம், விளக்கம் கேட்கலாம். நேற்று எப்படி உடனே மாற்று உத்தரவு பிறப்பித்தார். CISF படையுடன் செல்ல எப்படி உத்தரவு பிறப்பித்தார், என்று தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.
2 நீதிபதிகள் அமர்வு கேட்ட கேள்வி
நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற கோவில் நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை, அதன் காரணமாகவே தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுகளை பிறப்பித்தார் என்று மதுரை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது. இரண்டு நீதிபதிகள் அமர்வு இதில், மத நல்லிணக்கம் என்பது ஒருவரை ஏதும் செய்யவிடாமல் தடுப்பது அல்ல, இரு தரப்பு இணைந்து இணக்கமாக செயல்படுத்த நல்லிணக்கம். இரண்டு தரப்பு மற்ற தரப்பு செய்யும் பணிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற கோவில் நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நீதிபதி சுவாமிநாதன் யாரையும் தண்டிக்கவில்லையே. கோவில் நிர்வாகம் உத்தரவை நிறைவேற்றாத காரணத்தால்தான் நீதிபதி சுவாமி நாதன் CISF படையை அழைத்து செல்ல உத்தரவிட்டார். மற்றபடி நீதிபதி யாரையும் தண்டிக்கும்படி உத்தரவிடவில்லையே , என்று மதுரை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது.
தர்கா சார்பாக வாதம்
திருப்பரங்குன்றம் கோவில் விளக்கு வழக்கில் சிக்கந்தர் தர்கா சார்பாக முக்கியமான வாதம் வைக்கப்பட்டது. அதில், கோவில் நிர்வாகம் இல்லாமல் தனி நபர் அங்கே தீபம் ஏற்றுவது சரியல்ல. கோவில் நிர்வாகம் தீபம் ஏற்றாத போது தனி நபர் அங்கே தீபம் ஏற்றுவது சரியல்ல.
கோவில் நிர்வாகமே அங்கே தீபம் ஏற்ற நினைக்கவில்லை. அப்படி இருக்க தனி நபர் எப்படி அங்கே செல்ல முடியும், என்று சிக்கந்தர் தர்கா வாதம் வைத்தது. இதற்கு நீதிபதிகள், கோவில் நிர்வாகம் செய்யவில்லை என்றால் மாற்று ஏற்பாடு செய்ய உரிமை உள்ளது, என்று கூறினர்.
தீபத்தூண் கோவிலை விட பழமையானதா? கோவிலை முக்கியமானதா? என்று நீதிபதிகள் இன்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு தமிழக அரசு கொடுத்த பதில் கவனம் பெற்றது. தீபத்தூண் கோவிலை விட பழமையானதா? கோவிலை முக்கியமானதா? என்று நீதிபதிகள் இன்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு தமிழக அரசு அளித்த பதிலில், தீபத்தூண் பழமையானதா என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் அது வெறும் தூண், அவ்வளவுதான், கோவிலில் விளக்கு ஏற்றுவதே பாரம்பரியம் என்று அரசு தரப்பு பதில் அளித்துள்ளது.
100 ஆண்டுகள் வழக்கத்தை ஒரு நொடியில் மாற்ற சொல்லி இருக்கிறார் நீதிபதி. ஒரு இடத்தில ஒரு தீபம்தான் ஏற்ற முடியும், எல்லா இடங்களிலுமே ஏற்ற முடியும்? தீபத்தூணில் விளக்கு ஏற்றுவது கோவில் நிர்வாக கடமை என்றார் நீதிபதி, ஆனால் அது கட்டாயம் இல்லை என்றும் தமிழக அரசு வாதம் வைத்தது.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தீர்ப்பு
இந்த விசாரணையின் முடிவில் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய இரு நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்து உள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி சுவாமிநாதன் மீண்டும் விசாரிப்பார் என்று இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
அரசு கடமையை செய்ய தவறி உள்ளது. அரசு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தோன்றுகிறது. மத சடங்குகளை தடுப்பதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை அடைய முடியாது. யாருக்கும் இடையூறு இல்லாமல் தீபம் ஏற்றுவதை அனுமதிப்பதில் என்ன சிரமம், என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் இன்று நடந்தது திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி அல்ல.. மாறாக இதை பின்பற்ற தவறிய மாவட்ட நிர்வாகம் மீது அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது தொடர்பானது.
எனவே இன்று தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றோ.. வேண்டாம் என்றோ.. எந்த நாளில் ஏற்ற வேண்டும் என்றோ உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!









Click it and Unblock the Notifications