திருப்பரங்குன்றம் அருகே பயங்கரம்.. 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை! உடலை நடு ரோட்டில் வீசிய கொடூரம்
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவரை நடுரோட்டில் வீசி சென்றுள்ள கொடூரம் நடந்துள்ளது. மற்றொருவர் அடையாளம் தெரியாதவாறு பயங்கர ஆயுதங்களால் முகத்தை சிதைத்து கொன்றுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சம்பக்குளம் விலக்கு கப்பலூர் - மதுரை சுற்றுச்சாலை பகுதியில் ஒரு இளைஞர் உடல் சிதைக்கப்பட்ட நிலையில், கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்றவர்கள், உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

முதல் கட்ட விசாரணையில், சாலை விபத்தில் இறந்து இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால்,அந்த இளைஞரின் உடலில் வெட்டுகாயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கொலை செய்து உடலை சாலையில் வீசி சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நிலையூர் - சம்பக்குளம் அருகே ஒரு பாறையில் அடையாளம் தெரியாதவாறு 30 வயது மதிக்கதக்க ஒரு இளைஞர் முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என்று ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடைபெற்று இருப்பது திருப்பரங்குன்றத்தில் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் ஒரே கும்பல் கொலை செய்ததா? கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்யப்பட்டவர்கள் யார் ? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்கள் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களா அல்லது வெளியூரில் இருந்து கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் பகுதியில் இரட்டை கொலை நடந்தது இருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து, மதுரை மாவட்ட ஏஎஸ்பி நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications