"நீட் தேர்வில் இருந்து.. விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம்!" ஆவேசமான அமைச்சர் அன்பில் மகேஷ்
மதுரை: இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களும் நீட் நுழைவுத் தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் ஜூலை 17இல் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் விலக்கு தொடர்பான கோரிக்கை தமிழகத்தில் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்,

நீட் விலக்கு
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையே தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த செப். மாதம் தமிழ்நக சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, இந்த நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதையடுத்து இந்தத் தீர்மானத்தைத் தமிழக அரசு கடந்த மாதம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்காமல் உள்ளார்,

நீட் தேர்வு
இந்தச் சூழலில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர வரும் ஜூலை 17இல் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வரும் ஏப்ரல் 2 முதல் மே 7ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.

அன்பில் மகேஷ்
இந்தச் சூழலில் நீட் விலக்கு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். மதுரை புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஓய மாட்டோம்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "நீட் தேர்வுக்குத் தயாராகும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹைடெக் லேப் மூலம் முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், நீட் தேர்வில் இருந்து விலக்கும் தேவை. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம்" என்று தெரிவித்தார். நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டிலாவது நீட் விலக்கு கிடைக்குமா என்பதே மாணவர்களின் கேள்வியாக உள்ளது.

பாலியல் தொல்லைகள்
பள்ளிகளில் பாலியல் தொல்லைகள் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்க மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மேலும், பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் நபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications