”மத்திய அரசின் டிசைன்” ரயில்களுக்கும் வாய் தான் உண்டு.. காதுகள் இல்லை.. சு.வெங்கடேசன் கிண்டல்!
ரயில்களுக்கும் வாய்தான் உண்டு, காதுகள் இல்லை என்று சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
மதுரை: ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதனை குறிப்பிட்டு மத்திய அரசின் டிசைன்களில் ஒன்றாக ரயில்களுக்கும் வாய்தான் உண்டு காதுகள் இல்லை என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதாவை 4 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
அதேபோல் மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில சட்டப்பேரவை சட்டம் இயற்ற அதிகாரமில்லை என்று பதில் அளித்துள்ளார். இது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியதால், ஆளுநர் ஆர்.என்.ரவியை பல்வேறு அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் அமமுக உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் விமர்சித்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் வீடியோ மூலம் ஆளுநர் பற்றிய கேள்விக்கு அளித்த பதில் மக்களின் கவனத்தைப் பெற்றது. அதில் ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே... மத்திய பாஜக அரசின் ஆளுநர்கள் இதற்கு செவிமடுப்பார்கள் என நினைக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

காதுகள் இல்லை
அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த்தால், ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது என்று பதில் அளித்தார். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், முதல்வர் இப்படி பதில் கூறியது நேரடி விமர்சனமாக பார்க்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே ஆலோசனை
இந்த நிலையில் தென்மாவட்ட ரயில்வே திட்டங்கள் குறித்து தென்மாவட்ட எம்.பி-க்களுடன் மதுரை ரயில்வே அலுவலகத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் வைகோ, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், ரவீந்திரநாத் மற்றும் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய ரயில்கள் இயக்கவும், ரயில் சேவை நீட்டிப்பு, ரயில் சேவை அதிகரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

சு.வெங்கடேசன் கிண்டல்
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இரயில்களுக்கும் வாய் தான் உண்டு. காதுகள் இல்லை"
ஒன்றிய அரசின் டிசைன் ஒன்று போல் இருப்பது பற்றியும் இன்றைய தெற்கு இரயில்வேயின் எம் பிக்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டோம் என்று பதிவிட்டுள்ளார். நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர்கள் குறித்து பேசிய வார்த்தைகள் சு.வெங்கடேசனும் பயன்படுத்தி விமர்சித்தது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications