தலைமறைவு வாழ்க்கையிலேயே.. காலம் போயிடுமா? முன்ஜாமீன் கோரி ஆனந்த் மேல்முறையீடு!
மதுரை: கரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இவர்கள் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் தற்போது இவரும் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்திருக்கின்றனர்.
கடந்த 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் கட்சியின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட காவல்துறை 855/25 U/s 105, 110, 125(b), 223 BNS Act & 3 of TNPPDL Act என 5 பிரிவுகளின் கீழ் என்.ஆனந்த் மற்றும் சி.டி.நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதி செய்திருந்தது.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தங்களுக்கு முன்ஜாமீன் வேண்டும் என்று கோரி இருவரும் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிராமன் மற்றும் தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாமீன் எல்லாம் தர முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்திருந்தது. எனவே ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் தலைமறைவாகியுள்ளனர். கடந்த 7 நாட்களுக்கும் மேலாக அவர்களை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி இருவரும் மேல்முறையீடு செய்திருக்கின்றனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications