சத்திரப்பட்டி காவல் நிலையத்தை நொறுக்கிய 2 பேர் கைது.. துள்ளிய ரவுடிக்கு மாவுக்கட்டு!
மதுரை: திருமங்கலம் அருகே வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை சூறையாடி, தலைமைக் காவலர் சிறை வைக்கப்பட்ட சம்பவத்தில் 2 ரவுடிகளை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். போலீசார் கைது செய்யும் போது தப்பி ஓடிய பிரபாகரன் கீழே விழுந்ததில் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபாகரன் என்பவரின் தந்தையை போலீசார் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் தனது நண்பருடன் சேர்ந்து சத்திரப்பட்டி காவல் நிலையத்தை அடித்து உடைத்துள்ளார்.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சில மாதங்களுக்கு முன்பு காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் வி.சத்திரபட்டியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீனில் இருந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபாகரன் மீதான வழக்கு ஒன்று தொடர்பாக திண்டுக்கல் போலீசார் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கிருந்த அவருடைய தந்தை முத்துவேலுவிடம் விசாரித்துவிட்டு சென்றதாக தெரிகிறது. இதன்பிறகு வீட்டுக்கு வந்த பிரபாகரன் போலீசார் வந்த விவரத்தை அறிந்து கோபமடைந்துள்ளார். உடனே அவர் தனது நண்பருடன் சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் சென்றுள்ளார்.
அங்கு இரவுப் பணியில் இருந்த தலைமைக் காவலர் பால்பாண்டியிடம் வாக்குவாதம் செய்து, காவல் நிலையத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அடித்துச் சூறையாடியுள்ளனர். தலைமைக் காவலர் பால்பாண்டியை காவல் நிலையத்திற்குள் சிறை வைத்துவிட்டு தப்பியுள்ளனர். அதன் பிறகு பிற காவல் துறையினரால் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகளான பிரபாகரன் அவரது நண்பரை பிடிக்க, டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிர தேடுதலில் பிரபாகரன், அவரது நண்பர் அய்யனார் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.
போலீசார் கைது செய்யும் போது தப்பி ஓடிய பிரபாகரன் கீழே விழுந்ததில் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதான பிரபாகரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
சத்திரப்பட்டி காவல் நிலையத்தைச் சூறையாடி, தலைமைக் காவலரை சிறை வைத்த இருவரும் திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications