எம்பிக்களுக்கு இப்போது மதிப்பே இல்லை.. திடீரென மேடையில் வேதனைப்பட்ட திருமாவளவன்.. என்ன நடந்தது?
இதற்கு முன்பு எம்பி கையெழுத்து போட்டால் தொலைபேசி இணைப்பு, கேஸ் இணைப்பு, பெட்ரோல் பங்க் உரிமம் கிடைக்கும். கலெக்டர் பணி வழங்குவார்.
மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரான தொல் திருமாவளவன் பேசினார். அப்போது எம்பிக்களுக்கு இப்போது மதிப்பு இல்லை எனக்கூறி மேடையிலேயே வேதனையை பதிவு செய்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவராக திருமாவளவன் உள்ளார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்பியான இவர் திமுக கூட்டணியில் உள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் திருமாவளவன் மாநிலம் முழுவதும் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும், பொதுக்கூட்டங்களிலும் பேசுவதோடு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

கூட்டணி நிலவரம் என்ன?
இந்நிலையில் தான் திமுக கூட்டணிக்குள் பாமகவை கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாமக, பாஜக இருக்கும் கூட்டணியுடன் பயணிக்க மாட்டேன் என திருமாவளவன் கூறி வருகிறார். மேலும் அதிமுக, பாஜகவை தூக்கி சுமக்க வேண்டாம் என திருமாவளவன் கூறி வருகிறார். இதனால் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.

திருமாவளவன் பேச்சு
இந்நிலையில் தான் மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று திருமாவளவன் பங்கேற்றார். மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசினார். அப்போது எம்பிக்களுக்கு மரியாதை என்பது இல்லை என்ற வேதனையை அவர் பகிரங்கமாக மேடையிலேயே பகிர்ந்து வேதனைப்பட்டார். இதுபற்றி திருமாவளவன் எம்பி பேசியதாவது:

அதிக மரியாதை
ஒரு காலத்தில் எம்பிக்களின் கையெழுத்துக்கு அதிக மரியாதை இருந்தது. பரிந்துரை கடிதங்கள் வழங்கப்பட்டன. அப்போது ஒரு கையெழுத்துக்கு ரூ.25 வாங்கி கொண்டு தான் கையெழுத்திடுவார்கள். ஒரு நாளைக்கு 250 முதல் 300 கையெழுத்துகள் வரை போடுவார்கள். நான் வெற்று காகிதங்களில் கூட கையெழுத்து போட்டுள்ளேன். ஏனென்றால் என்னை மீறி என்ன நடந்து விடப்போகிறது?.

மரியாதை இல்லை
இதற்கு முன்பு எம்பி கையெழுத்திட்டால் தொலைபேசி இணைப்பு, கேஸ் இணைப்பு, பெட்ரோல் பங்க் உரிமம் கிடைக்கும். கலெக்டர் பணி கொடுப்பார். எம்பி அனுப்பி உள்ளார் என அவர் வேலை வழங்குவார். ஏனென்றால் எம்பிக்கு அவ்வளவு மரியாதை இருந்தது. ஆனால் இப்போது எம்பி என்றால் தம்பி என்கின்றனர். எந்த மரியாதையும் இல்லை. இப்போது எந்த அரசு வேலைக்கு சென்றாலும் ரெக்ரூட்மென்ட் முறை தான் உள்ளது. இதனால் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும்'' என பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications