மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடைசியில் இப்படியா பண்ணுவீங்க? மதுரையில் சீறிய எடப்பாடி! ஸ்டன் ஆன மாஜிஸ்! களமிறங்கிய கொங்கு க்ரூப்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் நேற்று எடப்பாடி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த அதிமுக கூட்டத்தில் சில பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதிமுக உட்கட்சி மோதல் கிளைமேக்சை நெருங்கி வருகிறது. பொதுக்குழு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.

இது போக இன்னொரு பக்கம் அதிமுகவில் தொண்டர்கள் ஆதரவை பெற எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். பெரிய அளவில் தொண்டர்களை திரட்டி தனது பவரை நிரூபிக்கும் வகையில் பொதுக்கூட்டங்களை அவர் நடத்தி வருகிறார்.

அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு.. இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை.. ஓபிஎஸ்-ஈபிஎஸ் யார் கை ஓங்கும்? அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு.. இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை.. ஓபிஎஸ்-ஈபிஎஸ் யார் கை ஓங்கும்?

 பொதுக்கூட்டங்கள்

பொதுக்கூட்டங்கள்

இந்த நிலையில்தான் மதுரையில் நேற்று எடப்பாடி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இரண்டு விஷயங்களை முன்னிறுத்தி எடப்பாடி தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. முதல் விஷயம்.. ஓ பன்னீர்செல்வத்தின் தென் மண்டல பலத்தை காலி செய்வது. ஓ பன்னீர்செல்வம் தென் மண்டலத்தில் மிகவும் வலிமையாக இருக்கிறார். இவருக்கு முக்குலத்தோர் சப்போர்ட் அதிகம் இருக்கிறது. இதை காலி செய்ய வேண்டும் என்றுதான் எடப்பாடி மதுரை மற்றும் சிவகாசிக்கு பயணம் மேற்கொண்டார். முக்குலத்தோர் ஆதரவை பெற அவர் முயன்றார்.

எம்எல்ஏக்கள்

எம்எல்ஏக்கள்

உதயகுமார், செல்லூர் ராஜு போன்றவர்கள் மூலம் தென் மண்டலத்தில் வலிமையான தலைவராக உருவெடுக்க முடியும் என்ற எண்ணத்தில் இப்படி செய்துள்ளார். இது போக தென் மண்டலத்தில் திமுக மீண்டும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. மதுரைக்கு 3 முறை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் சமீபத்தில் மதுரை சென்றார். தென் மண்டலத்தில் திமுக மிகவும் வலிமையாக இருக்கிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி மதுரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

மாஜிக்கள்

மாஜிக்கள்

தென் மண்டலத்தில் கடந்த முறை "வன்னியர் இடஒதுக்கீடு" காரணமாக எடப்பாடி பழனிசாமி கடுமையாக அடி வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் முக்குலத்தோரை கவரும் வகையில் அவர் மதுரைக்கு பயணம் மேற்கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் போன்றவர்களுக்கு எடப்பாடி டாஸ்க் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது மதுரை பொதுக்கூட்டத்தில் 25 ஆயிரம் பேராவது இருக்க வேண்டும் என்று அவர் டாஸ்க் கொடுத்துள்ளார்.

கூட்டம் எங்கே?

கூட்டம் எங்கே?

ஆனால் கடைசி நேரத்தில் இதில் சில சொதப்பல்கள் ஏற்பட்டு உள்ளன. முக்கியமாக கூட்டம் சேர்ப்பதில் கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால் நினைத்ததை விட குறைவான கூட்டம் கூடும் என்று முதல் நாள் தகவல் வந்துள்ளது. இந்த விஷயம் மாஜிக்களுக்கு சென்று உள்ளது. இதை கேள்விப்பட்டு எடப்பாடி பழனிசாமியும் அதிருப்தி ஆனதாக கூறப்படுகிறது. அதோடு நிகழ்ச்சி ஏற்பாட்டளார்கள்.. என்ன கூட்டம் வராதா? என்னங்க கடைசி நேரத்தில் இப்படி சொல்றீங்க என்று பதறி உள்ளனர்.

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

இதையடுத்தே கடைசியில் ஒரு வழியாக கொங்கு மண்டலத்தில் இருந்து ஆட்களை இறக்கி உள்ளனர். சேலம், கரூரில் இருந்து கொங்கு மண்டல ஆட்களை லாரியில் இரவோடு இரவாக அழைத்து வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. கூட்டம் குறைவாக இருந்தது "சமாளிக்க" இந்த ஏற்பாடு என்று கூறப்படுகிறது. எடப்பாடியின் இந்த மதுரை பயணம் வெறும் டீசர்தான். வரும் நாட்களில் அடிக்கடி எடப்பாடி பழனிச்சாமி மதுரை உள்ளிட்ட தென் மண்டலங்களுக்கு பயணம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

English summary
What happened during Edappadi Palanisamy Madurai Meeting? Why he was upset with few?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X