அதிகாலையில் திடீர் வெளிச்சம்! மதுரையில் வானத்தில் வேகமாக பறந்த மர்ம பொருள்! என்ன தெரியுமா? - வீடியோ
மதுரை: மதுரையில் வானில் நீண்ட நேரமாக வெளிச்சம் எழுப்பியவாறு பறந்த அடையாளம் தெரியாத பொருளால் மக்கள் அச்சம் அடைந்தனர். ஆனால் பின்னர் அது என்ன பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
Recommended Video
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள வல்லாளப்பட்டி பகுதியில் இன்று அதிகாலை வானில் நீண்ட நேரமாக அடையாளம் தெரியாத பொருள் ஒன்று நீண்ட பறந்துள்ளது. அது பார்பதற்கு வட்ட வடிவமாகவும் நீண்ட நேரமாக அதிக வெளிச்சம் வெளியிட்டவாரும் முன்னோக்கி பறந்து கொண்டே இருந்தது.
அதிகாலையில் கடைகளுக்கு சென்றவர்கள், பால் வாங்க சென்றவர்கள், வேலைக்கு சென்றவர்கள் பலர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை
அது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. சிலர் தங்களது மொபைல் போனில் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர், தற்போது அது வைரலாகி வருகின்றது. திடீரென பெரிய வெளிச்சத்தோடு இந்த பொருள் வானில் பறந்து உள்ளது. காலை 6 மணிக்கு பின் இந்த வெளிச்சமான பொருளை பார்த்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வேகமாக பறந்தது
இணையத்தில், வாட்ஸ் ஆப்பில் இந்த வீடியோவை பகிர்ந்த மதுரை மக்கள் பலர் இது என்ன பொருள் என்று சந்தேகம் எழுப்பி உள்ளனர். வெள்ளை மற்றும் சிவப்பு நெருப்பை கக்கிக்கொண்டு அந்த பொருள் வானத்தில் பறந்தது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் இன்று விண்ணில் செயற்கைகோள்களை ஏவ இஸ்ரோ அனுப்பிய பிஎஸ்எல்வி ராக்கெட் வெளிச்சம்தான் இது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செயற்கைகோள்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து காடுகளின் வளம், தாவரங்கள், மண்ணின் ஈரப்பதம் உள்ளிட்டவற்றை துல்லியமாக கண்டறிவதற்கான இரண்டு செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. 1,710 கிலோ எடை கொண்ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-04 இன்று அனுப்பப்பட்டது. பிஎஸ்எல்வி - சி 52 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு ராக்கெட் இதற்காக விண்ணில் பாய்ந்தது.

மக்கள் குழப்பம்
இந்த செயற்கைகோள் துருவ சுற்றுப்பாதையில் 529 கி.மீ. தொலைவில் சுற்றும் வகையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த வருடம் இஸ்ரோ மூலம் அனுப்பப்பட்ட முதல் செயற்கைகோள் ஆகும் இது. வேளாண் துறையில் இது அதிகம் பயன்படுத்தப்படும். அதையே அப்பகுதி மக்கள் பார்த்து அச்சப் பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. இந்த செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications