Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த 10 கோடி எங்கே போச்சு? அமைச்சர் பிடிஆரை உள்ளே இழுத்து.. திமுக அரசை கேள்வி கேட்ட அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்தபோது சூப்பர் கம்ப்யூட்டருடன் நவீன வானிலை ஆய்வு மையம் அமைக்க 10 கோடி ரூபாய் அறிவித்தார், அது என்ன ஆனது என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் துல்லியமாக தகவலை தரவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர் தெரிவித்தனர். முதலமைச்சர் ஸ்டாலினும் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுபற்றி பேசி இருந்தார்.

Where is Meteorological Center with a supercomputer, Annamalai asks dmk government

இந்நிலையில் திமுக அரசின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, வானிலை ஆய்வு மையத்தை பொறுத்தவரை முன்னெச்சரிக்கை மட்டுமே செய்ய முடியும், எவ்வளவு மழை பெய்யக்கூடும் என்று சொல்ல முடியும் என்றும் ஒரு இடத்தில் எத்தனை சென்டி மீட்டர் மழை பெயும், பாதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தங்களது முதல் பட்ஜெட்டில், அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிநவீன வானிலை மைய சூப்பர் கம்ப்யூட்டருக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். அவரை இலாகா மாற்றிய பிறகு அந்த பணம் என்ன ஆனது? சூப்பர் கம்ப்யூட்டர் ஏன் வாங்கவில்லை? அதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 கோடிக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பு அதிகமாக இருப்பதால், பாஜக எம்.எல்.ஏக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்கள். இந்தச் சூழலில் முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக, டெல்லிக்குச் சென்றிருக்கிறார். அவர் மட்டும் செல்லாமல் கட்சியின் மூத்த நிர்வாகிகளையும் அழைத்துச் சென்றுள்ளார்.

மழை வெள்ளத்தால் தென் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் எதையும் கண்டுகொள்ளாமல் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்குச் சென்றது, தமிழ்நாட்டு மக்களிடம், குறிப்பாக தென் மாவட்ட மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், அங்கு சென்று பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்பதுபோல் ஊடகங்களில் செய்தி வெளியிடுகிறார்.

தமிழ்நாட்டு மக்கள் இரண்டு ஆண்டு கால திராவிட ஆட்சியைப் பார்த்து விட்டார்கள். திராவிட அரசியலின் அஸ்திவாரம் 15 நாட்களில் உடைந்துவிட்டது. இந்த 15 நாட்களில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் திமுக அரசின் மீது, மக்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். இந்தக் கோபம் 2024 தேர்தலில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+