அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வென்றவர்கள் யார்? எத்தனை மாடு பிடித்தனர்? பரிசு என்ன? முழுவிவரம்
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று முடிவடைந்தது. இன்று விறுவிறுப்பாக நடந்து வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு இனிதே நிறைவு பெற்றது. இதில் வென்றவர்கள், அவர்களுக்கு கிடைத்த பரிசு பற்றிய விபரம் வருமாறு:
பொங்கல் பண்டிகையொட்டி மதுரை உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது மிகவும் உலகப்புகழ் பெற்றது.

அதன்படி நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது. இன்று 2வது நாளாக மதுரை பாலமேடுவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
இன்று காலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாடுகளை வீரர்கள் ஆர்வமாக அடக்கினர். அதேபோல் காளைகளும் ஆக்ரோஷமாக வீரர்களை முட்டி தூக்கி எறிந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இறுதிச் சுற்று மாலை 4.45 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5.45 மணிக்கு முடிவடைந்தது.

இறுதி சுற்று முடிவில் 14 காளைகளை அடக்கி நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்ற வீரர் முதலிடம் பிடித்தார். மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசி என்ற வீரர் 12 காளைகளை அடக்கி 2வது இடம் பிடித்தார். பொதும்புவை சேர்ந்த பிரபா 11 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்தார்.

இதில் அதிக மாடுகளை பிடித்து வென்ற நத்தம் பார்த்தீபன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார். அவருக்கு துணை முதல்வர் உதயநிதி வழங்கும் கார் பரிசாக கிடைக்கிறது. 2வது இடம் பிடித்த மஞ்சம்பட்டி துளசிராமுக்கு பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோல் சிறந்த காளையின் உரிமையாளருக்கு தமிழக முதல்வர் வழங்கும் டிராக்டர் மற்றும் 2வது பரிசாக சிறந்த காளையின் உரிமையாளருக்கு நாட்டின பசு மற்றும் கன்று வழங்கப்பட உள்ளது.
முன்னதாக நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். 11 சுற்றுகளாக 836 காளைகள் சீறிப்பாய்ந்தன. வீரர்கள் காளைகளை திறமையாக அடக்கினர். அதேபோல் காளைகளும் வீரர்களை பந்தாடியது. போட்டியின் இறுதியில்
19 காளைகளைப் பிடித்து திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்தார். 15 காளைகளைப் பிடித்து குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் திவாகர் 2வது இடத்தையும், 14 காளைகளைப் பிடித்து திருப்புவனம் முரளிதரன் 3வது இடத்தையும் பிடித்தனர். அதிக காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர் கார்த்திக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது.
2ம்இடம் பிடித்த அரவிந்த் திவாகருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மலையாண்டி என்பவரின் காளை, சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக மலையாண்டிக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. ஜி.ஆர்.கார்த்தி என்பவரின் காளைக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications