கரெக்ட்டா தாலி கட்டும்போது.. "சவுண்டு" விட்ட கர்ப்பிணி.. மாப்பிள்ளைக்கு குப்பென வியர்த்து.. ட்விஸ்ட்

கர்ப்பிணி பெண், தன் காதலனின் திருமணத்தை கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தினார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மாப்பிள்ளை கோலத்தில் தாலி கட்ட ரெடியாக நின்று கொண்டிருந்தார் மாப்பிள்ளை.. அந்த நேரம் பார்த்து உள்ளே புயலென நுழைந்தார் கர்ப்பிணி பெண்..!!

எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு கடைசி நிமிடங்களில் நின்றுபோய்விடுகின்றன.. மாப்பிள்ளை 2-ம் வாய்ப்பாட்டை சொல்லாதது, உருது வார்த்தைகளை சொல்லாதது, உள்ளிட்ட வினோத காரணங்களுக்காகவும் மணப்பெண்கள் தங்கள் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவங்களும் நம் நாட்டில் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன..

பெரும்பாலும், வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது வெடித்துவிடும்.. அல்லது சம்பந்தப்பட்ட ஆணோ, பெண்
ணோ, இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.. அப்படித்தான் மதுரையிலும் இன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வத்தலக்குண்டு

வத்தலக்குண்டு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன்... இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களது மூத்த மகள் பெயர் நாகபிரியா.. 30 வயதாகிறது.. பிசிஏ படித்துவிட்டு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்துள்ளார்... இவர்களது உறவினர் சின்னசாமி.. மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன்நகரை சேர்ந்தவர்தான் சின்னச்சாமி.. 32 வயதாகிறது.. இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர்.

 கர்ப்பம் - கர்ப்பிணி

கர்ப்பம் - கர்ப்பிணி

பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்... சொந்தக்காரர்கள் என்பதால், சின்னசாமிக்கும், நாகபிரியாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. கடந்த 2 வருடங்களாக காதலித்தும் வந்துள்ளனர்... நெருங்கி பழகியதால் நாகபிரியா கர்ப்பமாகிவிட்டார். இப்போது நிறைமாத கர்ப்பிணியாம்.. இந்தநிலையில், சின்னச்சாமிக்கு அவரது வீட்டில் வேறு ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தார்கள்.. அந்த பெண் விருதுநகரை சேர்ந்தவராம்.. திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடந்தன.. இன்றுதான் கல்யாணம்.

தாலி

தாலி

திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ஒரு மண்டபத்தில், உறவினர்களும், நண்பர்களும் சூழ்ந்து திரண்டு வந்தனர்.. ஆனால் இந்த கல்யாண விஷயம் நேற்றிரவுதான் நாகபிரியாவுக்கு தெரியவந்துள்ளது. இன்று காலை தன்னுடைய பெற்றோர், சொந்தக்காரர்களுடன் மண்டபத்தில் புயலென நுழைந்தார்.. அந்த நேரம் பார்த்துதான், சின்னசாமி, மணப்பெண்ணுக்கு தாலி கட்ட தயாராக நின்றிருந்தார்.. மண்டபத்தின் தன் கண்முன்னே, நாகப்பிரியா வந்து நின்றதை பார்த்ததுமே, மாப்பிள்ளைக்கு குப்பென வியர்த்துவிட்டது.. என்னை கர்ப்பமாக்கிவிட்டு இங்கு தாலி கட்ட வந்துட்டியா என்று நாகப்பிரியா ஆவேசமாக கேள்விகளை எழுப்பினார்..

 கரெக்ட்டா தாலி எடுத்தபோது

கரெக்ட்டா தாலி எடுத்தபோது

இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் திருமங்கலம் டவுன் போலீசார் மண்டபத்திற்கே வந்துவிட்டனர்.. சின்னச்சாமி வீட்டார் மற்றும் நாகபிரியா தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு பிறகு நாகபிரியா, சின்னச்சாமி, அவரது பெற்றோரை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று இன்ஸ்பெக்டர் காஞ்சனாதேவி விசாரணை நடத்தினார். கர்ப்பிணி நாகபிரியா, சின்னசாமி மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் கொடுத்துள்ளார்... விசாரணையும் நடக்கிறது.. ஆனால், தாலி கட்ட நேரத்தில் நடக்கவிருந்த என்ஜினியர் திருமணத்தை, டீச்சர் நாகப்பிரியா தடுத்து நிறுத்தியதால், கல்யாண பெண் விழித்து நின்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+