மத்திய அமைச்சராக சான்ஸ் இருக்கா? டக்கென ஓபிஎஸ் கொடுத்த ரியாக்சன்! அதிமுக பற்றி என்ன சொன்னார் பாருங்க
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வம் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறினார். அப்போது உங்களை மத்திய அமைச்சராக பார்க்கலாமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கும் ஓபிஎஸ் பதில் அளித்தார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியாகவும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியாகவும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலை சந்திக்கின்றன. இதில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக கூறியதால் பாஜக, அன்புமணி ராமதாசின் பாமக, டிடிவி தினகரனின் அமமுக, ஓ பன்னீர்செல்வத்தின் அதிமுக உரிமை மீட்புவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
இதில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். இந்த நிலையில், இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஓ பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தல் இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை தேர்வு செய்வதற்காக நடந்துள்ளது. இதில் பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு நல்ல ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. என்னை பொருத்தவரை நான் பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் கிடையாது. கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவன். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ராமநாதபுரம் தொகுதியில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓ பன்னீர் செல்வம், "என்னுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது" என்றார். அப்போது இனி உங்களை மத்திய அமைச்சராக பார்க்கலாமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ஓ பன்னீர் செல்வம், மேலே பார்த்து எல்லாம் இறைவன் கையில் இருக்கிறது என்று சிரித்தப்படி பதில் அளித்தார். தொடர்ந்து அதிமுக குறித்து பேசிய ஓபிஎஸ், "இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழலில் நாட்டு நடப்பினை, அரசு செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற ஒரே இயக்கமாக அதிமுக உரிமை மீட்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசியல் நடப்புகளை மிகத் துல்லியமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரால் அதிமுக இப்படி சின்னாபின்னமாக்கப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரியும். அது நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தல் முடிவு வந்த பிறகு மக்களுக்கு தெரியும்" என்றார்.
லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர்செல்வத்திற்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்றே கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications