அன்று ரவுடி பேபி.. இன்று சூர்யாதேவி: டிக்டாக் பிரபலங்களின் அட்டென்ஷன் சீக்கிங் அத்துமீறல்கள்..!
அத்துமீறும் டிக்டாக் பிரபலங்கள் மீது நடவடிக்கை தேவையாக இருக்கிறது
மதுரை: நாளுக்கு நாள் சோஷியல் மீடியாவில் டிக்டாக் பிரபலங்களின் அட்டகாசங்கள் எல்லை மீறி கொண்டிருக்கின்றன.. இவர்களுக்கெல்லாம் தமிழக போலீஸ் கடிவாளம் போடுவது எப்போது என்ற எதிர்பார்ப்பு நிறைந்த கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் டிக்டாக் எந்த அளவுக்கு பெரும்பாலானோரை ஆட்டிப்படைத்தது என்பதை சொல்ல வேண்டியதில்லை.. இப்போது யூ-டியூப்பில் தவமாய் தவம் கிடக்கும் பலரும் ஒரு காலத்தில் டிக்டாக்கில் முழு நேரமும் விழுந்து கிடந்தவர்கள் தான்...
இதில் எல்லாரையுமே குறை சொல்ல முடியாது.. நாலு சுவற்றுக்குள் அடைபட்டுக் கிடந்த எத்தனையோ திறமைசாலிகளுக்கு ஒரு திறவுகோலாக டிக்டாக் திகழ்ந்தது என்பதை மறுக்க முடியாது..

ஆபாசம்
அதேசமயம், சிலர் அரைகுறை ஆடையில் ஆபாச நடனம், இரட்டை அர்த்த வசனங்கள் போன்ற வீடியோக்களை வெளியிட்டு, தங்களை தாங்களே சிதைத்து கொண்டதையும், பொதுமக்களால் பொதுவெளியில் வறுத்தெடுக்கப்பட்டதையும் மறுக்க முடியாது.

அத்துமீறல்
அப்படிப்பட்ட பிரபலங்களில் ஒருவர்தான் ரவுடி பேபி சூர்யா.. அசிங்கமாக, ஆபாசமாக பேச பேச, இவரது ஆடைகள் குறைய, குறைய, வியூவர்ஸ்கள் அதிகமாயினர்.. ஆனால், இதுவே சூர்யாவுக்கு எதிர்வினையாக மாறிவிட்டது.. ஒருகட்டத்தில் எல்லை மீறவும், போலீசில் புகார் வரை சென்றது.. சில சமயம் இவரே போலீசில் சிக்கி கொண்ட நிகழ்வும் உண்டு.. ஒருமுறை தற்கொலை முயசியிலும் ஈடுபட்டு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார்..

சூர்யாதேவி
இப்போது வரை தொடர்ந்து ஏதாவது வீடியோ போட்டு தன் மீதான கவனத்தை மக்களிடம் குவித்து வருகிறார். அதற்கு பகடைக்காயாக சிக்கா என்பவரையும் பயன்படுத்தி கொண்டு வருகிறார். இதில் இன்னொரு பிரபலமான சூர்யாதேவியும் தற்போது சம்பந்தப்பட்டுள்ளார். சூர்யாதேவிக்கும், சிக்காவுக்கும் இடையே சோஷியல் மீடியாவில் அடிக்கடி விவாதங்கள், மோதல்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.. அதேபோல, இவர்கள் 2 பேரின் மோதல் வீடியோக்களும், சவால் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டே இருக்கும்.

நடவடிக்கை
இந்த டிக்டாக் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகவும் சோஷியல் மீடியாவில் உள்ளது.. சில தினங்களுக்கு முன்பு, தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் செயலாளரும் ஒருங்கிணைந்த மகளிர் கூட்டமைப்பு தலைவியுமான புனிதவள்ளி ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, திருச்சி இலக்கியா, ஜிபி முத்து உள்ளிட்டோர் பதிவிடும் வீடியோக்கள் மிகவும் மோசமாக உள்ளன..

ஆபாச பேச்சு
தற்போது பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் ஆன்லைன் வாயிலாகவும் படிக்கும் நிலை உள்ளது.. அதற்காக இணைய வசதியுடன் கூடிய செல்போனை பயன்படுத்துகிறார்கள்... அத்துடன் யூடியூப் சேனல்களையும் பார்க்கிறார்கள்... எனவே, அந்த ஆபாச பேச்சு வீடியோக்களை, யூடியூப் சேனலில் இருந்து எடுக்க வேண்டும். இனி அவர்கள் பதிவிட முடியாதபடி செய்ய வேண்டும். கூடவே இப்படி மோசமாக வீடியோ வெளியிடுபவர்கள் மீது போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இதன்மீதான விசாரணை என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

நடவடிக்கை
அதேபோல, இவர்கள் அத்தனை பேரும் சோஷியல் மீடியாவில் ஆபாசமாக பேசி கலாச்சாரத்தை சீரழிப்பதாக ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனிலும் ஆசிரியர் ஒருவர் புகார் தந்திருந்தார்.. ஆனால் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை..

ஆபாச கடிதம்
ஒருவேளை இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்பட்சத்தில், ஜிபி முத்துவுக்கு ஆபாசமான கடிதம் அனுப்பியவர்களுக்கும் குற்றவாளிகள் என்றே கருதப்படக்கூடும்.. அப்படியானால் அவர்களும் கைது செய்யப்படலாம்.. ஜிபி முத்துவும், தனக்கு வரும் ஆபாச கடிதங்களை படித்து பார்த்துவிட்டு, அது ஆபாசமாக இருக்கிறது என்று தெரிந்தும், அதை பதிவிட்டுவருவதால் அவரும் குற்றவாளியேதான் என்பது மக்களின் பரவலான கருத்தாக உள்ளது.

சூர்யதேவி
ஜிபி முத்து, சிக்கா, சூர்யா, சூர்யாதேவி, சாதனா, திவ்யா, இவர்களில் யாராக இருந்தாலும் அவர்களின் தனி உரிம சுதந்திரங்களில் பிறர் தலையிட முடியாதுதான்.. அதேசமயம், தங்கள் வீடியோக்களை பதிவிட சோஷியல் மீடியாவில் எந்தவிதமான கடிதமும் பெறாமல், அனுமதியும் பெறாமல், வேண்டுமென்றே தங்களை பிரபலப்படுத்தி கொள்ளவும், கிடைத்த புகழை தக்க வைக்கவும் தொடர்ந்து மலிவான சம்பவங்களில் ஈடுபட்டு வருவதையும், அதற்காக எந்த எல்லைக்கும் செல்வதையும், அதற்காக தமிழக மக்களை பயன்படுத்தி கொள்வதையும் ஏற்க முடியாது..

நடவடிக்கை
நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் தலைதூக்கி கிடக்க, அன்றாடம் பிழைப்புக்கே வெகுஜன மக்கள் விழிபிதுங்கி கிடக்க, இதுபோன்ற தற்கொலை மிரட்டல்களுக்கெல்லாம் தமிழக போலீஸை தேவையில்லாமல் அலைக்கழிப்பதையும், மெனக்கெட வைப்பதையும் அனுமதிக்க முடியாது.. அந்தவகையில், நாளுக்கு நாள் அட்டகாசங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த டிக்டாக் பிரபலங்களின் அட்டென்ஷன் சீக்கிங் அத்துமீறல்களுக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளியை தமிழக போலீசார் மேற்கொண்டால் நல்லா இருக்கும்..!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications