அந்தரங்க வாழ்க்கை.. பெற்ற குழந்தையை கைவிட்டு.. தோழியுடன் குடும்பம் நடத்தும் பெண்.. மதுரை பரபரப்பு
தோழியுடன் குடும்பம் நடத்தி வருகிறார் இளம்பெண் ஒருவர்
மதுரை: குழந்தை, கணவனை விட்டுவிட்டு, பள்ளி தோழியுடன் குடும்பம் நடத்தி வரும் இளம்பெண்ணின் முடிவு அவரது குடும்பத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மதுரையை அடுத்த பனங்காடியை சேர்ந்தவர் சரவணன்... இவரது மனைவி ஜெயஸ்ரீ... 2019-ம் ஆண்டில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால், குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ வீட்டில் இருந்து மாயமானார்... இதனால் அவரை பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் தேடினர்..

உத்தரவு
இறுதியில் அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர்... போலீசாரும் அந்த புகாரின்பேரில் பல மாதங்கள் தேடினர்... அப்போதும் கிடைக்கவில்லை.. இறுதியில், தன்னுடைய மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட்டில் சரவணன் வழக்கு தொடர்ந்தார்... அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்க ஹைகோர்ட்டும் உத்தரவிட்டது.

விசாரணை
இதனால் ஜெயஸ்ரீயை போலீசார் மேலும் தீவிரமாக தேடி வந்த நிலையில், ஒருவழியாக சென்னையில் கண்டுபிடித்தனர்.. அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்: அதில், "மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நானும் துர்காதேவியும் ஒன்றாக படித்தோம். அப்போதே நெருங்கி பழகி வந்தோம்.. காதலர்கள் போல இருந்தோம்.. பள்ளிப்படிப்பு முடிந்தும் இந்த உறவு தொடர்ந்தது..

துர்காதேவி
இந்த விஷயம் என் வீட்டில் தெரிந்துவிடவும், உடனடியாக கல்யாணம் செய்து வைத்துவிட்டனர். ஆனாலும் துர்காதேவியை மறக்க முடியவில்லை.. கர்ப்பிணியாக இருந்ததால், அந்த நேரத்தில் அவரிடம் செல்ல முடியவில்லை.. அதனால்தான் குழந்தை பிறந்ததும், குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு துர்காவை பார்க்க சென்னைக்கு வந்துவிட்டேன்..

நீதிபதி
துர்காவுக்காகவே என் தலைமுடியையும் ஆண்போலவே வெட்டி கொண்டேன்.. டிரஸ்ஸும் ஆண் போலவே அணிந்து கொண்டேன்.. இப்போது ஒன்றாக குடித்தனம் நடத்தி வருகிறோம்" என்றார். இதையடுத்து, தோழிகள் 2 பேரையும் போலீசார் மதுரை ஹைகோர்ட்டில் ஆஜர்படுத்தினர்... அப்போது ஜெயஸ்ரீ நீதிபதியிடம், கணவருடன் செல்ல விருப்பவில்லை, குழந்தையும் வேண்டாம்.. தன்னுடைய தோழியுடனேயே வசிக்க விருப்பம் என்றார்..

குழந்தை
அவருக்கு உரிய வயதாகிவிட்டது என்பதால் அவரின் விருப்பப்படி செல்லலாம் என்று கோர்ட் தெரிவித்தது... இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஜெயஸ்ரீயை பார்த்து, அவரது குடும்பத்தினர் கதறி கதறி அழுதனர்.. தங்களோடு வந்துவிடுமாறு கெஞ்சினர்.. பெற்ற குழந்தையை ஜெயஸ்ரீயிடம் காட்டினர்.. அதையும் அவர் கண்டுகொள்ளவில்லை.. தோழியுடன் கிளம்பி சென்று கொண்டே இருந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications