மங்களூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Honey Trap தம்பதி: அர்ச்சகருடன் உல்லாசமாக இருந்த மனைவி! வீடியோ எடுத்த கணவர்! கடைசியில் நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

மங்களூர்: வீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க அர்ச்சகர் ஒருவரை வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்து ரூ 19 லட்சம் வரை பணம் பறித்த தம்பதியை மங்களூரு போலீஸார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவ்யா (30). இவரது கணவர் குமார் புராஜூ (35). இவர் ஹாசன் மாவட்டம் அரக்கலகுடுவை சேர்ந்தவர். இவர் கார் டிரைவராக பணியாற்றி வந்தவர்.

இவர்கள் வீட்டில் சில பிரச்சினைகள் இருப்பதாக கூறி சிக்மக்ளூருவை சேர்ந்த அர்ச்சகர் ஒருவரை சந்தித்துள்ளனர். அவர் ஜோதிடராகவும் பணி செய்து வருவதால் அவரை பரிகார பூஜை செய்ய வீட்டிற்கு அழைத்தனர்.

தலைமுடியை பிடித்து இழுத்து.. தரையில் தள்ளி.. உதைத்து... கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை.. பகீர் வீடியோ தலைமுடியை பிடித்து இழுத்து.. தரையில் தள்ளி.. உதைத்து... கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை.. பகீர் வீடியோ

பவ்யா

பவ்யா

இதை நம்பி அந்த அர்ச்சகரும் பவ்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பவ்யாவும் குமாரும் திட்டம் போட்டு அர்ச்சகரை ஏமாற்றியுள்ளனர். பவ்யாவும் அந்த அர்ச்சகரிடம் ஆசை வார்த்தை பேசி தன்னுடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். இதை குமார் வீடியோவாக எடுத்து வைத்திருந்தாராம்.

அர்ச்சகர்

அர்ச்சகர்

இந்த நிலையில் பூஜை எல்லாம் முடிந்து அர்ச்சகர் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது குமார் அந்த அர்ச்சகருக்கு போன் செய்து தனக்கு பணம் கொடுக்குமாறும் இல்லாவிட்டால் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை சமூகவலைதளங்களில் போட்டுவிடுவேன் என்றும் குமார் மிரட்டியதாக தெரிகிறது.

ரூ 19 லட்சம் பறி கொடுத்த அர்ச்சகர்

ரூ 19 லட்சம் பறி கொடுத்த அர்ச்சகர்

இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் ரூ 15 லட்சத்தை புரட்டி குமார் தம்பதியிடம் கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் அர்ச்சகரை போன் செய்த குமார், மீண்டும் பணம் கேட்டுள்ளார். இப்படியே சிறுக சிறுக ரூ 19 லட்சத்தை அர்ச்சகர், குமார் தம்பதியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மங்களூர் போலீஸார்

மங்களூர் போலீஸார்

எனினும் அடங்காமல் மீண்டும் மீண்டும் அர்ச்சகரிடம் பணம் கேட்டு குமார் தம்பதி தொல்லை கொடுத்தனர். இதனால் அர்ச்சகர் மங்களூர் போலீஸிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் தம்பதியை அழைத்து விசாரித்து அவர்களை கைது செய்தனர். மேலும் இவர்கள் இப்படியே ஒவ்வொருவரையாக உல்லாச வலையில் விழவைத்து மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

இரு தங்க மோதிரம்

இரு தங்க மோதிரம்

இவர்களிடம் இருந்து ரூ 31 ஆயிரம் பணம், இரு தங்க மோதிரம், 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர். முதலில் சிறிய வீட்டில் இருந்த பவ்யா தம்பதி, ஏமாற்றிய பணத்தில் ரூ 10 லட்சத்தில் பிளாட்டில் லீசுக்கு சென்றுள்ளனர். அந்த வீட்டிற்குத் தேவையான மரச்சாமான்கள் ரூ 7 லட்சம் மதிப்பில் வாங்கி குவித்துள்ளனர். மேலும் புதிய இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளனர்.

English summary
A couple arrested for honey trapping a priest by Rs 19 lakhs in Mangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X