கிராமமே புதைஞ்சுருச்சு..மகாராஷ்டிரா நிலச்சரிவில் 16 பேர் பலி! நிறைய பேரு சிக்கி இருப்பதாக ஷாக் தகவல்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் அருகே உள்ள கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள இர்ஷல்வாடி கிராமத்தில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி 17 வீடுகள் இடிந்து விழுந்து இருக்கின்றனர்.

மகாராஷ்டிராவையே சோகத்தில் மூழ்கடித்து இருக்கும் இந்த நிலச்சரிவு சம்பவத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்தார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் நிலச்சரிவிலும், இடிபாடுகளிலும் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். இந்த மீட்புப் பணியின்போது மீட்கப்பட்ட நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து இருக்கும் நிலையில் 22 பேர் இதுவரை மீட்கப்பட்டு இருக்கிறார்கள். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கிராமத்தில் பலர் மாயமாகி இருப்பதாகவும் அவர் நிலச்சரிவில் புதையுண்டு இருக்கலாம் எனவும் கூறப்படும்.

எனவே இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்க வாய்ப்புகள் உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட கிராமத்துக்கு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி, மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரேவும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவியை மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications