‛சீதையை அவமதித்த மாணவர்’.. ராமாயண நாடக காட்சியால் களேபரமான புனே பல்கலை.. பரபரப்பு - அதிரடி ஆக்சன்
மும்பை: புனே பல்கலைக்கழகத்தில் நடந்த ராமாயண நாடகத்தில் சீதை சிகரெட் புகைக்கும் காட்சி இடம்பெற்றது சர்ச்சையானது. இதையடுத்து அங்கு மோதல் ஏற்பட்ட நிலையில் பல்கலைக்கழகம் களேபரமானது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி கோவில் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். இதையடுத்து பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவில் திறந்த 11 நாளில் 25 லட்சம் பக்தர்கள் அயோத்தியில் ராமர் சிலையை தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து மக்கள் கூட்டம் ராமர் கோவிலில் அலைமோதுகிறது.
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலம் புனே பல்கலைக்கழகத்தில் ராமாயணம் கதையின் அடிப்படையில் மாணவ-மாணவிகள் நாடகம் அரங்கேற்றம் செய்தனர். புனே பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான புனே லலிதத் கால கேந்திராவில் நிகழ்ச்சி நடந்தது. இந்த நாடகத்தில் இந்து மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையிலான வசனங்கள் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சீதை போன்று வேடம் போட்டு இருந்தவர் புகைப்பிடிக்கும் வகையிலான காட்சி இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து அங்கிருந்த இந்த நாடகத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பாக செயல்படும் ஏபிவிபி எனும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோஷமிட்டு நாடகத்தை நிறுத்தும்படி கூறினர். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் கோஷமிட்டவர்களை தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த சம்பவத்துக்கு ஏபிவிபி மற்றும் பாஜகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக ஏபிவிபி அமைப்பை சேர்ந்த ஹர்ஷ்வர்தன் ஹர்புட் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியது உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். லலித் கலா கேந்திரா துறையின் தலைவரான பேராசிரியர் பிரவீன் போலே, மாணவர்களான பாவேஷ் பட்டீல், ஜெய் பேட்னீகர், பிரதமேஷ் சாவந்த், ரிஷிகேஷ் தால்வி, யஷ் சிக்லி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே தான் ராமாயணம் நாடகத்தில் சீதை சிகரெட் புகைக்கும் காட்சி தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications