காட்டுப்பன்றி குறுக்கே வந்து கோர விபத்து.. குப்புற விழுந்த கார்.. பாஜக எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் பலி
பாஜக எம்எல்ஏ மகன் கார் விபத்தில் உயிரிழந்தார்
மும்பை: காட்டுப்பன்றி ஒன்று குறுக்கே ஓடிவந்து காரில் மோதிவிட்டது.. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்துக்கு ஆளானது.. இதில் பாஜக எம்எல்ஏ உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்..
மகாராஷ்டிரா மாநிலம், செல்சுரா அருகே உள்ள பாலத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.. பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் என்பவரது மகன் அகிஷ்கர் ரஹாங்டேல்.. இவர் ஒரு மருத்துவ மாணவர்..
இவர் அங்குள்ள ஒரு மெடிக்கல் கல்லூரியில் படித்து வருகிறார்.. நேற்று இவருக்கு மருத்துவ கல்லூரியில் தேர்வு நடந்துள்ளது. இந்த தேர்வு எழுதுவதற்காக நண்பர்கள் 6 பேரை அழைத்து கொண்டு சென்றுள்ளார்..

தேர்வு
பரீட்சை முடித்துவிட்டு, ஒரு விருந்துக்கு சென்றிருக்கிறார்கள்.. அந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு, காரில் 7 மாணவர்களும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.. செல்சுரா அருகில் உள்ள பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு காட்டுப்பன்றி குறுக்கே வந்துவிட்டது.. இதனால் காரை ஓட்டிக் கொண்டிருந்த அவிஷ்கர் ரஹாங்டேல், பிரேக் போட முயன்றார்..

விபத்து
ஆனால், கார் கட்டுப்பாடின்றி தாறுமாறாக பாலத்தில் ஓடியது.. அவர்கள் அலறி சத்தம் போட்டும், சாலையில் அந்தநேரத்தில் மக்களின் நடமாட்டம் இல்லை என்றே தெரிகிறது.. பிறகு கார் நிலைகுலைந்து குப்புற கவிழ்ந்து விழுந்ததில் 7 மாணவர்களுமே அதில் உருக்குலைந்து உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கார் விபத்தில் பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

காட்டுப்பன்றிகள்
நேற்றிரவு 1.30 மணி அளவில், அந்த பாலத்தில் இருந்து கார் கீழே உருண்டு விழுந்தில் அனைவருமே உடல் நசுங்கி உயிரிழந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.. பாலம் இருந்த பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் இருந்ததா? என்பது குறித்த அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு நடந்து வருகிறது..

விசாரணை
விபத்து குறித்த தகவல் அறிந்ததுமே போலீசார் விரைந்து சென்று அவர்களை மீட்க முயன்றுள்ளனர்.. ஆனால், அடையாளம் தெரியாத அளவுக்கு அவர்களின் உடல் உருக்குலைந்து போயிருந்தது.. காலேஜ் ஐடி கார்டுகளை வைத்தே அவர்கள் மருத்துவ மாணவர்கள் என்பதும், அதில் ஒருவர் பாஜக எம்எல்ஏ மகன் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.. உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் வர்தாவில் உள்ள சாவாங்கி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தவர்கள்.

இறுதி ஆண்டு
இதில், நீரஜ் செளகான், விவேக் நந்தன், பிரத்யூஷ் சிங் மற்றும் சுபம் ஜெய்ஸ்வால் ஆகியோர் இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளனர்.. அவிஷ்கார் ரகாங்தாலே மற்றும் பவன் சக்தி ஆகியோர் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளனர்.. மாணவர்களின் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதம அமைச்சர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications