பூமிக்கு கீழிருந்து வந்த "ஓலம்".. பதறியடித்து ஓடிய மக்கள்! 1 வாரமா தூக்கமே இல்லை! இப்படியொரு கிராமமா

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் பூமிக்கு அடியில் இருந்து கேட்ட விசித்திர சத்தம் காரணமாக கிராமம் ஒன்றில் மக்கள் தூக்கமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

நெட்பிளிக்ஸில் வெளியாகி ஹிட் அடித்த சீரிஸ் 'Stranger Things'. இந்த தொடரில் வரும் ஊரில் அடிக்கடி அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கும்.

பூமிக்கு கீழே இருக்கும் கருப்பு உலகத்தில் இருந்து வரும் ராட்சச மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையில் அங்கு மோதல் நடக்கும். இதை வைத்து அந்த தொடர் சுவாரசியமாக எழுதப்பட்டு இருக்கும்.

பூமி

பூமி

அந்த தொடரில் பூமிக்கு அடியில் இருந்து அடிக்கடி அமானுஷ்ய ஓலங்கள் கேட்கும். அப்படித்தான் மகாராஷ்டிராவில் உள்ள லத்தூர் என்ற மாவட்டத்தில் ஹசோரி என்ற கிராமத்திலும் விசித்திரமான சத்தம் கேட்டு வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் பூமிக்கு அடியில் இருந்து இந்த சத்தம் வருவதாக புகார் வைத்து உள்ளனர். அதாவது பூமிக்கு அடியில் இருந்து திடீரென பெரிய அளவில் ஓலம் கேட்பதாக கூறுகிறார்கள்.

பெரிய சத்தம்

பெரிய சத்தம்

நீங்கள் தரையில் நிற்கிறீர்கள். திடீரென உங்களுக்கு தரையில் இருந்து பெரிய சத்தம் வந்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் அந்த ஊரிலும் அடிக்கடி சத்தம் கேட்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசிலும் புகார் அளித்துள்ளனர். போலீசார் இதை எப்படி விசாரிப்பது என்று தெரியாமல் மண்டையை பிச்சுக்கொண்டு உள்ளனர். இப்படி தொடர்ந்து சத்தம் கேட்பதால் அப்பகுதி மக்கள் இரவில் தூங்க முடியவில்லை என்றும் கூறி உள்ளனர்.

 இன்னொரு உலகம்

இன்னொரு உலகம்

தரையில் படுத்தால் பூமிக்கு அடியில் இன்னொரு உலகம் இருப்பது போல சத்தமாக கேட்கிறது என்று கூறியுள்ளனர். இதையடுத்து அங்கு ஆய்வு செய்ய Indian Institute of Geomagnetism ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கி உள்ளனர். இந்த கிராமம் மகாராஷ்டிராவில் கில்லாரி கிராமத்தில் இருந்து 28 கிமீ தூரத்தில் உள்ளது. இந்த கில்லாரி கிராமத்தில் கடந்த 1993ல் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 9700 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

சத்தம்

சத்தம்

இந்த நிலையில் இப்போது ஹசோரி கிராமத்தில் கேட்கும் சத்தத்திற்கு பின் ஏதாவது சிறிய அளவிலான நில அதிர்வு காரணமாக இருக்குமா என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் அப்பகுதி மக்கள் இடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏதோ அமானுஷ்யம் இருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். அந்த கிராமத்தில் வாசிக்கவே பயமாக இருக்கிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+